பக்கம்:கடற்கரையினிலே.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14. மார்க்கப் போலர்


தென்பாண்டி நாட்டுக் கடலருகே உள்ளது காயல் என்னும் துறை. முன்னாளில் அது பெரியதொரு துறைமுக நகரம். பொருநையாறு கடலொடு கலக்குமிடத்தில் முத்து விளையும் பெருந்துறையாக விளங்கிய காயல், இப்பொழுது தூர்ந்து கிடக்கின்றது. கடல் நெடுந்துரம் விலகிவிட்டது.

கலங்கள் இயங்கும் காயலாக அத்துறைமுகம் சிறந்திருந்த காலத்தில் பாண்டி நாட்டிற்கு வந்தார் மார்க்கப் போலர் என்ற மேல்நாட்டு அறிஞர்; காயல் மாநகரைக் கண்டார். அந்நகரின் அழகிய கடற்கரையில் நின்று பேசலுற்றார்:

"தென்னவன் நாட்டு நன்னகரே ! முன்னொரு காலத்தில் எத்திசையும் புகழ்மணக்க வீற்றிருந்த இத்தாலிய நாட்டிலே பிறந்தவன் நான்' இளமையிலேயே இவ்வுலகம் முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என் உள்ளத்தில் எழுந்தது. அந்த ஆசையால், கலத்தினும் காலினும் போந்து பல நாடு நகரங்களைக் கண்டேன்; பண்டைச் சிறப்புடைய பாண்டி நாட்டை வந்தடைந்தேன்; ஐந்து மன்னர் இந்நாட்டில் ஆட்சி புரிகின்றார்கள். தலைநகரில் சுந்தர பாண்டியன் அரசு வீற்றிருக்கின்றான். அவன் வாழும் முறையையும் ஆளும் முறையையும்