பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25



அரசி இசபெல்லா அமைத்த சிறப்புக் குழுவினர் 1486-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் சாலமங்கா என்ற ஊரில் கூடினார்கள். கொலம்பஸ் திட்டத்தைப் பற்றி அவர்கள் ஆராய்ந்தார்கள். ஆனால் அவர்களுடைய விவாதங்கள் ஒரு தீர்மானத்துக்கு வராமலே கலைந்து விட்டார்கள். மீண்டும் ஒரு முறை கூடி விவாதிக்கலாம் என்ற முடிவுடன் அவர்கள் குழுக்கூட்டத்தை முடித்து விட்டார்கள். ஆனால், கொலம்பஸ் வாழ்க்கை நிலையை நன்கு அறிந்த டீகோ டி டீசா என்ற குழு உறுப்பினரின் செல்வாக்குக் காரணமாகவும், குழுத்தலைவரான டாலவெராவின் நல்லெண்ணம் காரணமாகவும், கொலம் பசுக்கு ஆண்டுக்கு 12,000 செப்புக் காசுகள் வாழ்க்கைச் செலவிற்காகச் கொடுப்பதென அந்தக் குழுவில் முடிவாயிற்று.

தொகைதான் 12,000. ஆனால் வெறும் செப்புக் காசுகள் தான் இருந்தாலும், தெய்வ சிந்தனையும் ஆடம்பர மற்ற எளிய வாழ்வும் மேற்கொண்டிருந்த கொலம்பஸ் போன்ற மனிதனுக்கு அந்தக் காலத்துப் பொருளாதார நிலைமையை நோக்கும் போது இந்தத் தொகை வாழ்க்கைச் செலவுக்குப் போதுமானதுதான். ஆனால், கொலம்பசின் துரதிருஷ்டம் அந்தத் தொகை கூட அவனுடைய தேவைக்கு ஒழுங்காகக் கிடைத்து வரவில்லை.

நாட்கள் நகர்ந்தன; மாதங்கள் மறைந்தன, ஓராண்டும் உருண்டது; அடுத்த கிறிஸ்துமஸ் கூட வந்துவிட்டது. டாலவெராவின் தலைமையில் அமைந்த அந்தக் குழுவினர் மீண்டும் கூடவேயில்லை.

எண்ணம் நிறைவேறும் நாளை எதிர்பார்த்துக் காத் திருந்த கொலம்பசுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் யுகமாகத் தோன்றியது. அவர்களோ இதைப் பற்றிய,