பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}8 தண்ணிரையும் குடிக்கக்கூடாது. வெள்ளத்தினலே முன்னே விட எல்லாம் மோசமாக இருக்கும்’ என்று அவள் தாய் மொழிந்தாள். சாலேயிலே தண்ணிரைச் சிதறி அடித்துக்கொண்டு அரைமணி நேரத்தில் மோட்டார் வண்டி வந்து வாயிலுக்கு முன் கின்று ஹாரன் அடித்தது. அது உள்ளே வந்திருங் தால் ஒரு குளத்திற்குள்ளே மூழ்கியிருக்கும் ஜூடியும் அவள் தாயும் ஓரமாகவே சென்று குளத்தைக் கடந்து மோட்டார் வண்டிக்குள் ஏறினர். யூரீமதி ஞானம்மாள் வண்டிக்குள் அமர்ந்திருந்தாள். நீலப்புடவை அணிந்திருந்த அவள் உற்சாகமான ஒரு பெண்மணி. அவளுடைய பற்களில் பல தங்கத்தால் கட்டப்பட்டிருந்தன. ஐக்கிய காடுகளின் சர்வதேசக் குழங்தைகள் அவசரத்தேவை கிதி வழங்கியுள்ள பால்பொடி வைத்த பெட்டிகளுக்கிடையே அவள் அமர்ந்திருந்தாள். சில திண்டுகளும் உள்ளே இருந்தன. அவர்கள் அனைவரும் நெருக்கி உட்கார்ந்து கொண்டனர். மோட்டார் வண்டி புறப்பட்டது. மழை கின்று 3 அல்லது 4 மணி நேரம் ஆகிவிட்டபடியால் வெள் ளம் குறைந்து விட்டது. ஆளுல் தரையெங்கும் ஓடிக் கொண்டிருந்த தண்ணிர் ஆறுகளுக்குள்ளே சேர்ந்து கொண்டிருந்தது. அதனுல் அவைகள் இன்னும் பெருக் கெடுத்தன. குருமார்களின் தலைப்பாகைகளைப் போன்ற உயரமான தொப்பிகளை அணியும் சென்னைப் போலீஸ் காரர்களில் ஒருவன் ஓரிடத்திலே அவர்கள் வண்டியை கிறுத்தி ஒரு பாலத்திற்கருகே வெள்ளம் பெருகியிருப்பதால் வேருெரு சாலை வழியாகப் போகும்படி சொன்னன். கடைசியில் வெள்ளம் மிக மோசமாக இருந்த ஒரு பகுதிக்கருகில் அவர்கள் சென்றடைந்தார்கள். மக்கள் கூட்டங்கட்டமாகப் பாதைக்கருகிலே கின்று கொண்டும்