பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{}9 உட்கார்ந்துகொண்டும் பரிதாபமான தோற்றத்துடன் இருப்பதை அவர்கள் கண்டனர். முன் பக்கத்தில் மரங் களுக்கும் புதர்களுக்குமிடையே சிவப்பு நிறமான தண்ணிர் புகுந்து சுழிந்து செல்வதையும் பார்த்தார்கள். ஒரு சிலர் வந்து பால்பொடிப் பெட்டிகளே வண்டியிலிருந்து இறக்கினர் கள். "ஜூடி, வா" என்று அவள் தாய் அழைத்தாள், வெள்ளம் புகுந்திராத மாமரங்களுக்கிடையே உள்ள ஒரு பாதை வழியாக அவர்கள் புறப்பட்டார்கள். ஓரிடத்தில் ஒரு குழி இருந்தது. அதில் தண்ணிர் ஆழமாக கின்றது. மிகவும் அசுத்தமான அந்தத் தண்ணிரில் என்னென்னவோ கிடந்தன. தண்ணிரில் மூழ்கி இறந்த ஒரு வெள்ளாட்டை ஜூடி கண்டாள். சேறு படிந்து செத்துக் கிடந்த சில கோழிகளும் கொஞ்ச நேரத்தில் தென்பட்டன. 'ஜூடி, அதோ பார், அந்தப் பள்ளிக்ககூடத்தில் தான் எல்லோரையும் கொண்டு சேர்த்திருக்கிருர்கள்’ என்று அவள் தாய் சொன்னுள். செங்கற் சுவர்களோடும் தாழ்வான கூரையோடும் கூடிய நீண்ட கட்டடம் அது. அவர்களில் ஒரு சிலருக் காவது தங்க ஒரு கூரை கிடைத்தது. டஜன் கணக்கான குடும்பங்கள் அங்கிருந்தன. சில குடும்பத்தினர் சிறுசிறு மூட்டை முடிச்சுக்களை வெளியே வைத்துவிட்டு மரக் கொம்புகளைக் கொண்டும் தழைகளைக் கொண்டும் குடிசை அமைக்க முயன்று கொண்டிருந்தனர். பாதைக்கருகிலே கண்களே மூடியவாறு ஒரு பெண் கிடந்ததை ஜூடி கண்டாள். அவளுடைய கறுப்புப்புடவை கனக்திருந்தது. 'பாவம், அவள் வெள்ளத்தில் மூழ்கி இறந்திருக்க வேண்டும். அவளுடைய சொந்தக்காரர்கள் யார் என்று கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கிருர்கள்"