பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. தேசிய வளர்ச்சித் திட்டப்பிரதேசம் இட்சுமிக்கு ஜூடி கடிதம் எழுதினுள். கிறைய அடித் தும் கையால் துடைத்து அழித்தும், ஈரமாகியும் இருந்தது அந்தக் கடிதம். அதனுல் அவள் தாய் அதை மறுபடியும் திருப்பி எழுதும்படி சொன்னுள். ஆனல் அதிக வெப்பமாக இருந்தது. ஜூடிக்குத் திருப்பி எழுத முடிய வில்லை. அவ்வாறு எழுதியிருப்பதை லட்சுமி பொருட்படுத்த மாட்டாள். கடைசியில் அதே கடித்தை உறைக்குள் போட்டாள். ஸ்பென்சருக்கு அவர்கள் போனபோது அங் குள்ள தபால் கிலேயத்திற்கு அதை அவள் எடுத்துச் சென்று தபாலில் சேரும்படி செய்தாள். பிறகு அவள் தாய் வெண்ணெயும், பிஸ்கோத்துக்களும், ஆஸ்பிரின் மாத்திரைகளும், மற்றப் பொருள்களும் வாங்கிக்கொண்டி ருக்கும்போது ஜூடி ஸ்பென்சர் சிற்றுண்டிப் பகுதியில் ஆரஞ்சுப் பானம் அருந்தினுள். அதன்பின் அவர்கள் எவர்சில்வர் பாத்திரங்களும், பித்தளை செப்புப் பாத்திரங் களும் விற்கும் ஒரு கடையிலிருந்து தண்ணிர் கொதிக்க கொதிக்க வைக்கும் கொதிகலம் ஒன்றை வாங்கினர்கள். தட்டுத்தட்டாக அமைந்த நிலைப்பெட்டியிலே பிரகாசமான