பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14

புரிந்து கொள்ள அவனுக்கு விருப்பமில்லாததால் அவனிடத்திலே பேசிக்கொண்டே இருப்பதில் பயனில்லை. வாசுகி என்பவள் துணி துவைக்கும் ஆயாவாக இருந்தாள். அவள் அழகானவள்; அவள் தன் தோற்றத்தை மேலும் அழகு படுத்துவதற்காகக் காதணிகளும், மூக்குத்திகளும் அணிந்திருந்தாள். தோட்டக்காரன் ஒருவனும் இருந்தான். உதிர்ந்த இலைகளையெல்லாம் பெருக்கித் தள்ளுவதும், தண்ணிர் ஊற்றுவதும், பூத்தொட்டிகளில் செடியாக வளர்ப்பதும் அவன் வேலை. பெரிய பெரிய அழகான கூடாரப்பூக்களையும், கண்ணைக்கவரும் நிறங்களுள்ள காசித்தும்பை, துலுக்குச் செவ்வக்தி ஆகிய மலர்வகைகளையும் அவன் உண்டாக்கினான். கருஞ்சிவப்பும், ஆரஞ்சு நிறமுள்ள நீண்ட கல்வாழை மலா்களையும், பூக்கோசு, வெண்டை, பூசணி முதலியவற்றையும் அவன் பயிரிட்டான். தோட்டத்திற்கும் பின்புறமுள்ள வீட்டிற்கும் இடையேயுள்ள வேலியில் ஆழ்ந்த நீலமும் கருஞ்சிவப்பு நிறமும் உள்ள மலர்களை பூக்கும் காக்காப் பூக்கொடிகளை வளர்த்தான். அவைகளுக்கும் கலியாணம் நடந்த வீட்டிற்குமிடையே காரை பூசிய சுவர் ஒன்று இருந்தது. அடுத்த பக்கத்திலுள்ள வீட்டிற்கும் அவற்றிற்குமிடையே இளஞ்சிவப்புக் கலந்த மஞ்சள் நிறமும் இனிய நறுமணமும் கொண்ட மலர்களையுடைய உண்ணிச் செடி, வேலியாக அடர்ந்து வளர்ந்திருந்தது. தோட்டத்திலே அரளிப்புதர்களும், மாமரமும், பொன்னரளி, கப்பல் அலரிப் புதர்களும், மஞ்சள், வெள்ளை நிறங்களில் அழகிய மலர்களோடும் இருந்தன. ஆனால் தோட்டக்காரனுக்கு ஒரு சாதாரண சிறு சாமக்திவகைச் செடியை வளர்ப்பதில்தான் அதிகமான ஆசை. சென்னையில் அதை வளர்ப்பது எளிதல்ல. எல்லாத் தோட்டக்காரர்களும் இப்படித்தானிருக்கிறாா்கள்.