பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3.5 தோட்டக்காரனுக்குச் சிலசமயங்களில் ஜூடி உதவி செய்வாள் செடிக்குத் தண்ணிர் ஊற்றுவாள். மழைக் காலத்தில் தவிர மற்ற காலத்தில் ஒவ்வொரு நாளும் தோட் டக்காரன் ஒவ்வொரு செடிக்கும் தண்ணிர் பாய்ச்சியாக வேண்டும். அப்படியிருந்தாலும் வெய்யிலின் கடுமை யால் புல்லெல்லாம் கருகி வாடி அழகற்றுத் தோன்றும்; இங்கிலாந்திலுள்ள புல்தரைகளைப் போலக் கொஞ்சங் கூடத் தோற்றமளிக்காது. தோட்டத்திலே ஒரு மகிழ்ச்சி யென்னவென்ருல் அங்கே எத்தனையோ பறவைகள் வரும். மைனுக்கள் அங்கே எப்பொழுதும் இருக்கும். பளபளப் பான அப்பறவைகள் புறக்கும்போது கருமையும் வெண் மையும் கலந்து தோன்றும். நீலச்சாம்பல் நிறமுள்ள கொண்டலாத்திகளும். கருஞ்சிவப்பு நிறத்தோடு விளங்கும் சிறிய தேன்சிட்டுகளும் அடிக்கடி வரும். தேன்சிட்டுக் களின் இறக்கைகள் வெகு வேகமாக விரிந்து மூடுவதால் அவற்றைப் பார்க்கவே முடியாது. ஏதாவது கொத்தித் தின்னக் கிடைக்கும் என்று தோன்றும்போதெல்லாம் அழ கற்ற கிழக்காக்கைகள் தாழ்வாரத்திற்கும், ஜன்னலுக்கும் கூட சிறகடித்துக்கொண்டு எந்த கேரத்திலும் வந்துவிடும். வெளியிலே மாட்டுவண்டிகள் கிரிச்சிட்டுக்கொண்டு சாலையிற் சென்றன. வேலியின் வழியாகப் பூச்செடிகளை எட்டிப் பிடித்துக் கடிக்க, வெள்ளாடுகள் முயலும். மோட் டார் கார்களும், லாரிகளும் சாலையின் வழியாகப் போவ துண்டு. சிலசமயங்களில் ரிக்ஷாவும் செல்லும். மெலிந்த கால்களுடைய ஏழை மனிதன் ஒருவன் இழுத்துக்கொண்டு முன்னல் ஓடுகின்ற ரிக்ஷாவில் செல்லுவதை, ஜூடி என்றுமே விரும்பவில்லை. பள்ளியில் படித்த சில சிறுமிகள் ரிக்ஷாவில் அமர்ந்து வீட்டிற்குச் சென்றனர். சென்னையில்