பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16

உள்ள பஸ்கள் லண்டனில் உள்ள பஸ்களைப்போல அழகாகவும், வசதியாகவும் இருக்கக்கூடாதா என்று ஜூடி எண்ணுவாள் ஆனால் அவை அப்படி இருக்கவில்லை.

மாரிக்காலம் இவ்வளவு மோசமில்லை. ஆனால் ஒரு சில வாரங்களுக்கே மாரிக்காலம் நீடித்தது. அப்பொழுதும் இங்கே இங்கிலாந்திலே கோடையில் மிகக் கடுமையான வெப்பமுடைய நாட்களைப் போல இருக்கும். அதுவே மிகக் குளிராகவும், குளிக்க இயலாதவாறும் உள்ளதென்று சிலபேர் நினைப்பார்கள். மோட்டார் காரின் வெளிப்பக்கத்தைத் தொட்டால், குளிரால் கை வெடித்துப் போவது போன்ற குளிர் இங்கு கிடையாது.

மாரிக்காலத்தில் வாரக்கடைசி நாட்களில் அவர்கள் எங்காவது பயணம் போவார்கள். மகாபலிபுரத்திற்கு அவர்கள் சென்றிருந்தனர். கல்லால் செதுக்கிய பெரிய நந்திகளும் பானைகளும் நூற்றாண்டு நூற்றாண்டாக அங்கே நின்றதுபோலவே இப்பொழுதும் வெய்யிலிலே அமைதியாக நிற்கின்றன. அங்குள்ள பழமையான கோயிலுக்கு அருகிலே நீலக்கடலிலிருந்து அலைகள் எழுந்து வெண்நுரையோடு கரையிலே மோதுகின்றன. ஒரு பெரிய பாறையிலே துறவிகளையும், அவர்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் வனதேவதைகளையும், குரங்குகளையும், தியானம் செய்யும் பூனையையும், சாதுவான யானைகளையும் புடைப்புச் சித்திரங்களாகச் செதுக்கியுள்ளார்கள்.வேறொரு பாறையிலே கிருஷ்ணன் ஒரு மலையைத் துக்கிப் பிடித்துக் கடுமையான இடி மழைக்குப் பயந்த இடையர்களையும், பயமறியாத பசுக்களையும் காப்பதுபோல உருவாக்கியுள்ளார்கள்.

பறவைகளின் புகலிடமான ஓரிடத்திற்கு அவர்கள் சென்றனர். அங்கே மரங்களிலே மடையான்கள் ஏராளமாகக்