பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 களுக்காகப் பணப் பைகளும், கைக்குட்டைகளும், நோட்டுப் புத்தகங்களும், சிறிய வாசனைத்திரவப் புட்டி களும் வாங்கினுள். தபால் தலை சேகரிப்பதில் விருப்ப முள்ள அந்தப் பையனும் பட்டியில் சேர்க்கப்பட்டிருக் தான். இப்பொழுது அவன் தீப்பெட்டிகளைச் சேகரிப்பதில் ஈடுபட்டிருந்தான். வெவ்வேறு வகையான சித்திர முகப்பு களுடன் இந்தியாவிலே நூற்றுக்கணக்கான தீப்பெட்டிகள் இருந்தன. பட்டிகள் தயாரிக்கப் பயன்படும்படியாக ஜூடி அவனுக்கென்று ஒருதிருகு பென்சிலேத் தேர்ந்தெடுத்தாள். ஹரிதாஸாக்கும் அதிலே யொன்று வாங்கிளுள். மலேப் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் படித்த ஆங்கிலச் சிறுமி கள் இருவரும், சிவிட்ஸர்லாந்துச் சிறுமி யொருத்தியும் இருந்தனர். அவர்களுக்கென்று இந்தியக் கைத்தொழில் பொருள் விற்கும் கடையிலிருந்து பரிசுகள் வாங்கி வந்தாள். எல்லாம் வேடிக்கையாக இருந்தது. கிறிஸ்துமஸ் மரத்தை அலங்காரம் செய்த பிறகு அம்மணிப்பாட்டியை வந்து பார்க்கும்படி ஜூடி கேட்டுக்கொண்டாள். எதற்காக உச்சியிலே ஒரு கட்சத்திசம் இருக்கிறது என்பதைப்போன்ற பல கேள்விகளே அம்மணிப்பாட்டி கேட்கத் தொடங்கினுள். 'அதுதான் ஆட்டிடையனுடைய கட்சத்திரம்’ என்று கூறினுள் ஜூடி ஆட்டிடையர்களும் மூன்று அரசர்களும்அவர்களில் ஒருவர் கீழைநாட்டிலிருந்து வந்தவர்-பெத்லம் வந்து மாட்டுக் கொட்டிலிலிருந்த குழந்தையைக் கண். கிறிஸ்துமஸ் கதை முழுவதையும் அவள் அம்மணிப் பாட்டிக்குச் சொன்னுள். அம்மணிப்பாட்டிக்குக் கதை முழுவதும் பிடித்தது. பசுக்களும், கழுதையும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த விஷயம் முக்கியமாக அவளுக்குப் பிடித்தது. அந்தக் குழந்தை மனிதனுகி பலியாகின்ற மற்றப் பகுதி கிறிஸ்துமஸ் கதையைவிட இது மிக கன்ருக