பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2. வேலியிலே சந்து

ண்ணிச்செடி வேலிக்குப் பின்புறமிருந்த அண்டை வீட்டார்களை பெஞ்சமினுக்குப் பிடிக்கும்; ஆனால் ஜூடிக்கு அவர்களை அந்த அளவு பிடிக்கவில்லை. அவர்களுடைய தோட்டம் அழகற்றது. அதன் பெரும்பாகம் ஏழு வயது, எட்டு வயதான இரண்டு சிறுமிகளுக்கும், ஒரு குழங்தைப் பையனுக்கும், ஒரு மாட்டுக்குமாக இருந்தது. பையனுடைய பெயர் ராமகிருஷ்ணன். அத்தனை சிறிய குழந்தைக்கு அத்தனை பெரிய பெயரா? குடும்பத்திலுள்ள ஒவ்வொரு வரும் அவனைப்பற்றிப் பெரிதாக நினைத்தார்களென்று தோன்றிற்று. துாக்கமுடியாதபடி கனமாக இருந்தாலும் அவனுடைய தமக்கைகள் அவனை அடிக்கடி தூக்கிக் கொண்டு சென்றார்கள். அந்தச் சிறுமிகளில் இளையவளை ஜூடிக்குப் பிடிக்கும். அவள் பெயர் வசந்தி, பந்து விளையாட்டு, பம்பரம் ஆடுதல், கயிறு சுழற்றுதல் என்றால் அவளுக்கு விருப்பம். ஜூடி அவளுக்கு ஆங்கிலத்தில் சில விஷயங்கள் சொல்லிக் கொடுத்தாள். அவற்றை அவள் விரைவிலே கற்றுக்கொண்டாள். விளையாடும்போது பாடும் தமிழ்ப் பாட்டுக்களை அவள் ஜூடிக்குப் பாடிக் காண்பித்தாள். ஆனால் பாட்டு முடியுமுன்னாலேயே அவளுக்குச்