பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
32

இந்தியச் செருப்புக்களை கழற்றி விடுவது மிகவும் எளிது. அவற்றில் கட்டை விரலுக்கு மட்டும் பட்டையிருக்கும். அவளுடைய செருப்பின் தோல் பட்டைகள் பின்னல் வேலைகளுடன் அழகாக அணி செய்யப்பட்டிருந்தன.

தாழ்வாரத்திலே வசதியான பிரம்பு நாற்காலிகளும் சிறிய மேஜைகளும் நிறைய இருந்தன. அந்த அம்மாள் அவர்களை உள்அறைக்கு அழைத்துச் சென்றாள். அது வெளிச்சம் குறைவாகவும் குளிர்ச்சியாகவுமிருந்தது. ஒரு நிமிஷத்திலே தட்டில் காப்பியை எடுத்துக்கொண்டு ஒரு வேலைக்காரன் அங்கு வந்தான். அந்தக் கோப்பைகளைக் கொண்டு தாங்கள் குடிப்பதில் அந்த அம்மாளுக்கு ஆட்சேபமில்லை என்று ஜூடி ஆறுலோடு நினைத்தான். அந்த அம்மாள் தலையில் வைத்திருந்த வெள்ளை மஞ்சள் நிறமான மலர்களின் நறுமணமும், காப்பியின் மணமும் கலந்து இனிமையாக வீசிற்று. தாழ்வாரத்தின் தளம் நன்கு பெருக்கி மெழுகப்பட்டிருந்தது. தொட்டிகளிலிருந்த செடிகளிலே ஓர் இலை கூட ஒழுங்கற்றிருக்கவில்லை. ஜூடி சுற்றிலும் பார்ப்பதை அந்த அம்மாள் கவனித்தாள். “வெள்ளிக்கிழமை ரொம்ப நல்லநாள். எல்லாம் ஒரே சுத்தமாக இருக்கிறது. வெள்ளிக்கிழமையன்று நான் வெகு நேரத்திலேயே துரங்கியெழுந்துவிடுவேன். எல்லாம் சுத்தமாக இருப்பதை நினைத்தாலே எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்றாள் அவள்.

“அன்று நீங்கள் என்ன செய்வீா்கள்?” என்று ஜூடி மெதுவாகக் கேட்டாள்.

“எண்ணெய் தேய்த்துக் குளிப்பேன். அது ரொம்ப ரொம்ப நல்லது. அதற்குப் பிறகு ஒரு புதிய உணா்ச்சி