பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களோடும் ஆஸ்பத்திரித் தோட்டங்கள் அழகாகத் தோன் றின. வேறு டாக்டர்களின் மனைவிகள் சிலரோடு ঃত4 யின் தாய் பேசிக்கொன ருந்தாள். அவர்களுடைய பெண் குழந்தைகளில் ஒரு ஜூடி படிக்கும் அதே பள்ளியில் படித்தாள். அவளைப் பார்த்து ஜூடி முகத்தைச் சுளித்துக் கொண்டிருந்தாள். எழுந்துபோய் அவளுடன் பேசுவதற்கு முடியாதவாறு அவ்வளவு வெப்பமாக இருந்தது. பிறகு டாக்டர்களில் வேருெருவர் வந்து தம் மனைவியை அறிமுகப் படுத்தினர். தோள்களுக்கிடையே அகன்று தோன்றும் அவள் மற்ற டாக்டர்களின் மனைவிகளைவிட உயரமாக இருந்தாள். அவள் தன் தலையை அதிகமாக கிமிர்த்திக் கொண்டிருப்பதாகப்பட்டது. ஆடைகளையும் அவள் சற்று வேறுவிதமாக அணிந்திருந்தாள். தோளிலே மிக அழகான ஒரு தங்க எளுமல் புரூச் விளங்கிற்று. அவள் பேச ஆரம்பித்து ஒரு கிமிஷங்கட்ட ஆகவில்லை. அதற்குள் அவள் தான் வட இந்தியாவிலிருந்து வந்திருப்பதாகவும் இந்தப் பகுதியிலிருந்து வரவில்லையென்றும் தெரிவித்துக் கொண்டாள். அவள் ஆங்கிலம் மிக கன்ருகப் பேசிளுள். * இங்கே குடும்பம் நடத்துவது சிரமமாகத் தெரிகிறதா? தமிழ் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறதா?’ என்று ஜூடியின் தாய் கேட்டாள்.

  • தமிழா? ஒரு நாளுமில்லை!” என்று தனது தலையை ஆட்டிக்கொண்டு அவள் பதிலளித்தாள். அதன் பிறகு, * நீங்கள் வடக்கே போயிராவிட்டால், உங்களுக்கு உண்மையான இந்தியா எப்படியிருக்குமென்றே தெரியாது, டெல்லி ஆக்ரா அவற்றிற்கு மேலே மலைப் பிரதேசங் கள் : அசுத்தமான இந்தத் தென் பகுதியைப் போலல்ல’’ என்று மேலும்சொன்னுள்.