பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


73 குச்செல்லும் சாலையை அடைந்தனர். கூடையிலிருந்த பழங்களே எடுத்துச் சாப்பிட்டுவிட்டுத் தோல்கன வெளியே வீசினர்கள். ஆடுகளும், குரங்குகளும் வந்து அத்தோல் களைத் தின்றுவிடுமாதலால் சாலே அசுத்தமாவதில்லை. மரங்களிலெல்லாம் சிவந்த புழுதி படிக்திருந்தது. அவர்கள் கடந்து சென்ற ஒவ்வொரு லாரியும் ஒரே புழுதிப் படலத்திலிருந்தது, மாட்டு வண்டிகள் கிரீச்சிட்டுக் கொண்டு மெதுவாகச் சென்றன. கிலம் வறண்டும் மாகிறத் தோடும் இருந்தது; மாதக்கணக்காக அது அப்படித் தானிருக்கும். பசுக்கள் எப்படி மெலிந்து பரிதாபமாக இருந்தன: அம்மணிப்பாட்டியின் இரண்டு பசுக்களுக்கும் இவற்றிற்கும் எத்தனை வேறுபாடு அந்தப் பசுக்களுக்கு காவேரி, கோதாவரி என்று இந்தியாவிலுள்ள இரண்டு புண்ணிய கதிகளின் பெயரை வைத்திருந்தனர். கிறைய அவை பால் தங்தன. அம்மணிப்பாட்டி அவைகளுக்கு உலர்ந்த புல்லும், வைக்கோலும் வாங்கிப்போட்டாள். இந்தப் பசுக்களெல்லாம் பாவம், தழைகளையும், முள்ளுள்ள சிறு குற்றுச்செடிகளையும் தேடி அலேயவேண்டும். சென்னை யைச் சுற்றியுள்ள எல்லாப் பிரதேசத்திலும் கோடை காலத் திற்கு முன்பு சென்ற பிப்ரவரியில் ஆழமில்லாத ஏரிகளைப் பார்த்ததாக ஜூடிக்கு ஞாபகம்.ஆளுல் இப்பொழுது எல்லாம் வறண்டு வெடித்துக்கிடந்தது. சில ஏரிகளின் அடிப்பரப்பில் மட்டும் சாம்பற் பசுமையான தழைகளேயுடைய முலாம்பழக் கொடி படர்ந்திருந்தது. அதில் மஞ்சள் கிறமான பூக்களும், இளம் பொன்னிறமான பிஞ்சுகளும் இருந்தன. முதற் பருவ மழைக்குப் பின் கொஞ்சம் புல் வளர்ந்திருந்தது; சில காய் கறிச் செடிகளும் பயிராகியிருந்தன. ஆனல் வெப்பத்தால் அவற்றில் பெரும்பான்மை உலர்ந்து போய்விட்டன. ‘எப்பொழுது மறுபடியும் மழை வருமோ!' என்ருள் ஜூடி.