பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மழை அக்டோபர் கடைசி நாட்களிலே மழைப் பருவங்களில் முக்கியமான இரண்டாம் பருவத்து மேகங்கள் குவியத் தொடங்கின. இரவு முழுவதும் இடி உருமிற்று. “ஒரு சமயம் மறுபடியும் வெள்ளம் வந்தால் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் கடந்திருக்குமென்று நம்புகிறேன்’ என்று ஜூடியின் தாய் சற்று அச்சத்தோடு கூறினுள். அவளுடைய பொதுகல சேவையெல்லாம் ஏழைமக்க ளுக்காக ஏற்பட்டதே அவர்கள் ஏதாவது ஒரு காரணத் தால் வீடின்றியும் பசியோடும் இருந்தனர். கடலி வேலை செய்வது, எப்பொழுதும் மிகுந்த சிரமத்தோடும் அவசரத் தோடும் பாரவண்டிகளைத் தள்ளுவது, மூட்டைகளைச் சுமப்பது இப்படி ஏதாவது வேலை கிடைக்குமென்று நம்பி ஆண்கள் தங்கள் கிராமங்களை விட்டுச் சென்னைக்கு வந்த னர். அவர்களுக்கு அந்த வேலைகடடக் கிடைக்கவில்லை போலும். அவர்களுடைய மனைவிமாரும், குழந்தைகளும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து விட்டனர். அவர்களுக்கு இருக்க எங்குமே இடமில்லை. அதிர்ஷ்டமிருந்தால் ஏதாவது ஒரு வீதியிலே சுவரின் கிழலிலோ மரத்தின் அடியிலோ