பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ش؛ {8 களில் பட்சனங்கள் செய்திருந்தனா. அவற்றின் மேல் சிறுசிறு வெள்ளி ரேக்குகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றைச் சாப்பிடலாம். டப்பிகளில் அடைத்துவரும் பாலேடுகளோடு கூடிய பழக்கலவைகளும் இருந்தன. அகலமான தாழ்வாரங்களே உடைய பெரிய வீடுகளில் அது ஒன்று. ஒரு பகுதிக்குக் கூரை போடப்பட்ட முற்றம் ஒன்று உள்ளேயிருந்தது. உண்மையான மலர்களாலும், காகிதப் பூக்களாலும் அது அலங்கரிக்கப்பட்டிருந்தது. செப்பிடுவித்தைக்காரன் ஒருவனே அந்த முற்றத்திற்கு வரவழைத்திருந்தார்கள். திண்ணையில் அவர்கள் அமர்ந்து கொண்டனர்; அல்லது தூண்களில் சாய்ந்து கொண்டு கின்றனர். முற்றத்தைச் சுற்றியுள்ள மற்றத் தாழ்வாரங் களுக்கு ஏராளமான மக்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் பெரியப்பன் சிற்றப்பன் மார்களாகவும், பெரி யம்மா, சின்னம்மா, அத்தைகளாகவும், அவர்கள் மக்களா கவும் தோன்றினர். செப்பிடுவித்தைக்காரன் சில பெண் களின் கூந்தலிலிருந்து கோழிக்குஞ்சுகளே எடுத்தான்; ஒரு பாம்பையும் எடுத்தான். ஆணுல் அந்தப் பாம்பிற்கு நச்சுப்பற்கள் இல்லை என்று எல்லோரும் சொன்னர்கள். ஒரு அழகான சிறிய மரம் வளரும்படி அவன் செய்து காண்பித்தான். ஜூடியின் சட்டைப்பையிலிருந்து அவன் ஒரு தங்கக் கடிகாரத்தை எடுத்தான். அது தங்கம் போலவே தோன்றிற்று. பிறகு அது மறையும் படியும் செய்தான். அவளுடைய அங்கிக்குள்ளே ஒரே பிசுபிசுப்பாக இருந்ததால் அவளால் ககரக்ககூட முடிய வில்லை. அவ்வாறில்லாமல் இருந்திருந்தால் அது இன்னும் நல்ல விருந்தாக அமைந்திருக்கும். யாருக்கும் விளையாட லாம் என்று தோன்றவில்லை. மலர்களாலும் நீண்ட கொடி களாலும் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல் ஒன்று தாழ் வாரத்தின் உத்தரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது,