பக்கம்:கடல் முத்து.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கடல் முத்து யின் தகப்பன். அவள்-பிள்ளைக்கனியின் தாய் உண்மை யென்று நம்பினுள். உயிரும் உயிரும் ஒன்ருயின. உடலும் உடலும் முதல் இரவு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடின. இருள் சிரித்த அந்தக் காட்டிலே, பூலோக சுவர்க்கத்தைத் தரிசித்தனர் காதலர்கள். ஆனல், காலம் சிரித்தது; ஊர் சிரித்தது; சமூகம் சிரித்தது. கண் கண்ட பூலோக சுவர்க்கமாம் இக் குழந்தையைக் கையால் எடுக்கத் தெம்பின்றி, அவளைப் பரபர வென்று இழுத்துக்கொண்டு ஒடோடிவிட்டான் அந்தப் பாவி! தேவலோகத்தில் மலர வேண்டிய பாரிஜாத மலர் வழிதவறிப் பூலோகத்தில் பூத்து விட்டது!’ என்ருர் பார்வதி கொழுநன், கண்ணிருடன். ஆதியே! பாரிஜாதம் கருகிவிடும் போலிருக்கிறது. நல்ல முடிவு காட்டுங்கள். துரிதப்படுத்துங்கள்!" என்று ஆதுரப் பட்டாள் சிவை. திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளுக்குச் சிரிக்கத்தான தெரியாது. . .? உதயம். தெய்வச் சந்நிதியில் தெய்வகானம்: சாதிகுலம் பிறப் பிறப்புப் பந்த முத்தி, அரு உருவத் தன்மை, நாமம் ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவற நின்றியக்கஞ் செய்யும் சோதியை மாத்துவெளியே மனிதவிழ நிறைவான துரிய வாழ்வேத் திதில் பரமாம் பொருளைத் திருவருளே நினைவாகச் சிந்தை செய்வோம்! தெய்வக் குழந்தையின் அழுகையொலி வரவரத் தேய்ந்துகொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/133&oldid=764980" இலிருந்து மீள்விக்கப்பட்டது