பக்கம்:கடல் முத்து.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கடல் முத்து மனம் ஒரு குழந்தை; எடுப்பார் கைப்பிள்ளை. எடுப் பவர்கள் குழந்தைவசம் மனமிழக்கலாம். அதே சமயம் குழந்தை எடுப்பவரைப்பற்றி எந்நிலையில் தீர்ப்பு நிர்ணயம் செய்கிறதோ? யார் அறிவார்கள்? காளியின் மனமும் அப் படித்தான்; அவன் அந்தப் பெண்ணைத் தங்கையாக மதித் தான். தன் சொந்தச் சகோதரியைப்போலவே, ஒரே தினுசாக-அசல் அவளே மாதிரி காணப்பட்ட அந்தச் சிறுமி யின் சூழ்நிலையிலேயே இருந்து, ஏதேனும் குற்றேவல் புரிந்து வாழ்வின் எஞ்சும் நாட்களைக் கழித்துவிடலாமென்று கனவு கண்டான் காளி. இது குறித்துக் குமாரசாமியிடம் பேச் செடுக்கவுமிருந்தான் அவன். ஆனல் அந்தப் பழி! காளி ப்ாவமறியாதவன். பழி சுமத்தப்பட்டான், பாவம்! காளி கண்விற்குங் கனவின் விழிப்பிற்கும் ஊடே அல்லாடி ன்ை. விழிப்பு அவனது கண்களை வழி திறந்தது. அதே கணம் அவ்வீட்டை விட்டு வெளியேறினன், நீர் முட்டிய கண்களால் உலகத்தைத் துழாவினன். காளிக்கு உலகம் இதயமற்றதாகப்பட்டது; பாச்மற்றதாகப்பட்டது: அவிழ்க்கக்கூடாத விடுகதையாகப்பட்டது. உள்ளத்தில் என்றும் பசுமையுடன் சி லே யோ டி ரு ந் த தன் ஆவித் தங்கையை-அடுத்து அதே ஸ்தானத்தில் தங்கச்சியென மதித்த அந்தப் பெண்ணை-அப்புறம் அவள் உண்டாக்கி விட்ட ஆருத புண்ணே-ஆகிய இவற்றைச் சுமந்தவாறு அவன், கால்கள் இழுத்த திக்கில் நடக்க ஆரம்பித்தான். நடந்தான், நடந்துகொண்டேயிருந்தான். வர வர அவ னுடைய நேத்திரங்களின் கூட்டுறவில் உலகம் சூன்யமாகிக் கொண்டே வந்தது! உலகம் பொல்லாதது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/75&oldid=765050" இலிருந்து மீள்விக்கப்பட்டது