பக்கம்:கடல் முத்து.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கடல் முத்து வச்சுக் கும்பிடுறேன். எப்படியும் அந்தக் குட்டி என் வசம் வந்திர நீதான் கண் திறக்க வேணும்." சற்று நேரத்திற்கு முன்பு குடிசைக்குத் திரும்புகையில் மாடன் வழியில் வஞ்சியைச் சந்தித்தான். வஞ்சி!' என்ருன். அவள் அழகு காட்டி நின்ருள். அவள் காட்டுப் பூ! குறவர் இனத்தில் அவள் ஒரு செந்தாமரை. அவள்மீது ஏனையக் குறவர்களுக்கு எப்போதுமே ஒரு கண் உண்டு. 'வஞ்சி, இன்னிக்கு நம்ப கண்ணுலத்தைப் பத்தி உங்கிட்டே உண்டு இல்லை’ன்னு ஒரு முடிவு கேட்டிர ரோசிச்சிருக்கேன்’ என்ருன் மாடன். "மச்சான், வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்ப லாமா என்ன? ஒங்கிட்டேயும் பேருக்கு அஞ்சு, பத்து வெள்ளிப் பணம் உருண்டுதான, நேத்திக்கு உங்க அண் ளுச்சி எங்கிட்ட அப்படிக் கேப்பாரா? அவருகிட்ட ரொம் பப் பணம் இருக்குதாம்; அவருக்கு எம்மேலே கண்ணு போலேருக்கு. பூடகமாச் சொன்னுரு. நான் முடிவாச் சொல்லிப்பிடறேன். நீங்களும் கையிலே கொஞ்சம் பணம் சேர்த்ததும் நம்ம ரெண்டுபேரும் கண்ணுலம் பண்ணிக்க லாம் மச்சான்.' வஞ்சி மேல்பூச்சாகக் கூறியதைக் கேட்ட மாடன், ஒரு கணம் சிலையானன். தான் விரும்பும் பெண்ணைத் தன் தமையனும் அடைய வலைபோடுகிருன் என்ற செய்தி அவ னைத் துயரத்திற்குள்ளாக்கியது. 'அண்ணனமில்லே அண்ணன்...அந்தப் பயல் எனக்கு அண்ணளு? ஊஹாம்; எல்லாம் வெளிவேஷம்! அப்ப டின்ன இதுவரை எம்பேரில் உசிரையே வச்சிருக்கவனைப் போல நடந்ததெல்லாம் பாவனைதான? வரட்டும்..." சொல்லாமல் கொள்ளாமல் வஞ்சி நடந்தாள். அதற் குள் மாடன் ஏதோ ஒரு ஸ்திரமான தீர்மானத்திற்கு வந்த வனைப் போல ஒடிப்போய், வஞ்சி, அதுக்குள்ளார இப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/77&oldid=765052" இலிருந்து மீள்விக்கப்பட்டது