பக்கம்:கடல் முத்து.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மையலும் தையலும் 69 படி விரசா ஒடறியே! நாளே விடிஞ்சதும் உன் கையிலே வெறும் வெள்ளிக்காசைக் குலுங்கச் செஞ்சுட்டாச் சம்ம தந்தானே? அப்புறம் நீ என் கண்ணுட்டியாறதுக்கு அட்டி யில்லையே' என்று சொல்லிக் கண் சிமிட்டினன். வஞ்சி யும் குறுநகையை உதிர்த்தவாறு திரும்பினள். இரு ஜோடி. விழிகளின் சங்கமத்தில் அவர்களது மணவினை ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது! ‘ஏலே மாடா..." அடித்தொண்டைக் குழியினின்றும் மிதந்தோடிய வார்த்தைகள் முனகலுடன் வெளிப்போந்தன. முருகு தம்பியை அலட்டினன். முழங்காலில் கைகளை அணைத்துக் கட்டிய வண்ண மிருந்த மாடன் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு சும்மா விருந்தான், கேட்டும் கேளாதது மாதிரி. முருகுவும் மாடனும் உடன்பிறப்பு. விவரம் புரிந்த நாள்தொட்டு அண்ணனின் பராமரிப்பில் வளர்ந்தவன் மாடன். முருகு சற்று முன்கோபி. கோபமிருக்கும் இடத்தில்தானே குணமுமிருக்கும் முருகுவுக்கு முதல் தாரம் கல்யாணம் பண்ணி அந்தப் பெண் இறந்து போளுள்: வருடங்கள் இரண்டு ஆகின்றன. இதுவரை அவன் கல் யாணத்தைப்பற்றி அக்கறை காட்டவில்லை. தற்சமயம் அந்தக் குடிசையில் அவர்கள் இரண்டு பேர் மட்டுமே வாசம். முருகு பாம்பு விஷத்தைப் போக் கடிப்பதிலே சூரன், அத்துடன் நாட்டு வைத்தியத்திலும் அவனுக்கு நல்ல பேர். பெயரும் புகழும் அவனுக்கு நிதி சேர்த்துத் தந்ததில் வியப்பில்லை அல்லவா? அது போக, மாடனும் தினமும் பாம்பு, மகுடி சகிதம் ஊர் சுற்றி வருவான். வரும்போது அவனுடைய சுருக்குப் பையாகிய கஜாளுவில் பல காசுகள் இன்ப ஒலி எழுப்பிக் கொண்டிருக் கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/78&oldid=765053" இலிருந்து மீள்விக்கப்பட்டது