பக்கம்:கடவுள் பாட்டு.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

பயிரைச் சூழும்:பூச்சியெலாம்
பறந்து மாயச் செய்மருந்தே
உயிரைச் சூழும் வினைத்துயரை
ஒழித்துத் தீர்க்கும் இன்னொளியே
உயரப் பறக்கும் புறாப்போலே
ஒன்றுங் கவலை யில்லாமல்
அயரா இன்பப் பெருவாழ்வை
ஆக்கித் தருவாய் பெருமானே.

91


நடப்ப தெல்லாம் நடந்திடவும்
நகரா தவ்வவ் விடங்களிலே
கிடப்ப தெல்லாம் கிடந்திடவும்
கீழே பற்றி நிற்பதெலாம்
கடப்ப தின்றி நின்றிடவும்
கருணை செய்தாய், உன்னாணை
கடப்ப தொன்றும் வையத்தே
காணப் பெறுமோ பெருமானே.

92

ஊற்று நீரில் குளிப்பதனால்
உடலுக் கின்பம் உண்டையா
காற்றுப் படியும் போதுடலில்
களிப்புச் சேர்வ துண்டையா
ஆற்று மணலில் படுத்திருந்தால்
அதுவும் இன்பம் தருமையா
போற்றும் உன்பொன் னடிநிழலில்
பொங்கும் இன்பம் மேலையா.

93

புத்தம் புதிதாய் மணம்செய்து
போகும் வழியில் மாப்பிளையை
மெத்தக் கொடிய பாம்பொன்று
மேவித் தீண்டிக் கொன்றதெனில்

-3-