உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கடவுள் பாட்டு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39நலிந்து நிற்கும் எளியாரை'
நாளுங் கொடுமைப் படுத் திடவே
வலிந்து நிற்பார் தமையடக்க
வருமா வலியான் நீயன்றோ
மலிந்து நிற்கும் துயரெல்லாம்
மாய்த்துன் அடியார் நலங்காத்துப்
பொலிந்து நிற்கும் என்தேவா
போற்றி நின்றேன் பொன்னடியே! 112

எண்ணு முன்னே இடர்வந்தே
என்னைச் சூழக் கண்டேன்நான்
கண்ணின் முன்னே வழியொன்றும்
காணா துள்ளம் கலக்குற்றேன்
வண்ணங் கலந்த மின்னொளிபோல்
வந்த துன்றன் திருவடியே
நண்ண வந்த துயரெல்லாம்
நலிந்து மறைந்து போயினவே! 113

மெய்க்கும் பொய்க்கும் இடையேநான்
சிக்கித் தவிக்கும் போதெல்லாம்
கைக்குத் துணையாய் வந்தென்னைக்
கரையில் ஏற்றி விடுந்தேவா
தைக்கு விளைந்த நெல்மணியே
தாகம் தீர்க்கும் தீம்பாலே
துய்க்கும் இன்பப் பொருளெல்லாம்
தூயோய் நீதந் தருளினவே. 114

சிந்திக் கிடக்கும் சர்க்கரையில்
சிற்றெ றும்புக் கூட்டம்பார்
சிந்து பாடும் வண்டினத்தைச்
செந்தா மரைக்கு மேலேபார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/41&oldid=1202702" இலிருந்து மீள்விக்கப்பட்டது