பக்கம்:கடவுள் பாட்டு.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42கள்ளின் அமுதம் பெருகிற்றே
கண்ணின் ஒளியும் பெருகிற்றே
உள்ள மயிர்க்கால் தொறுமிகவே
ஊறி நிறைந்த தின்னமுதே. 122

நிலவு நிறையும் நாளன்று
நீலக் கடல்தன் அலைக்கையைக்
குலவப் பெரிதாய் நீட்டுதல்போல்
கோமான் உன்றன் அருள் நிறைவில்
கலவி பெறஎன் உளம்பொங்கும்
கையும் குவிந்து நீண்டுயரும்
வலிவுந் தெளிவும் உண்டாகும்
வாய்க்கும் இன்பம் பெரிதாமே. 123

இதய மலராம் பீடத்தே
ஏறி யிருந்தாய் எம்பெருமான்
உதய மான பேரொளியோ
உடலம் எங்கும் பரவியதே
புதிய தென்பும் எக்களிப்பும்
புகுத்த தொவ்வோர் உறுப்பிலுமே
எதிலும் எங்கும் எப்போதும்
இன்ப ஒளியே நிரம்பியதே. 124

ஐயா உன்றன் புகழ்டாடி
யானோர் கவிதை நூல்செய்தேன்
மெய்யாம் என்றன் இறையுணர்வின்
மேன்மை புகழ்ந்தார் ஒரடியார்
தெய்வத் தமிழில் எனக்குள்ள
திறமை புகழ்ந்தார் ஒருபுலவர்
உய்யும் உணர்வும் தமிழ்த்திறமும்
ஒருங்கு தந்தோன் நீயன்றோ?

125