பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7



பொழுதுகண்டு மறைகின்ற கதிர வன்போல்
புதைகின்ற கிழவயதை எட்டி விட்டேன்.
அழுதுகொண்டு மற்றவர்போல் செத்தால், என்னை
அறிஞனென்று மதிப்பாரா ? கேள்வி ஏரால்
உழுதுகொண்டு சாகின்றேன் ; என்றும்போல
ஒயாமல் சிந்திக்கச் சொல்லுகின்றேன்.
விழுதிறங்கி என்கொள்கை எதிர்காலத்தில்
விரிவானம் போல்விளங்கக் காண்பீர் நீங்கள் !

இறுதியிலே நானொன்று வேண்டு கின்றேன்;
என்மக்கள் வளர்ந்துவரும் எதிர்கா லத்தில்
முறைதவறி நடந்தாலோ, பண்பை விற்று
முதல்சேர்க்க முனைந்தாலோ, உண்மை யென்னும்
நெறிநிற்க மறுத்தாலோ, சிந்திக் காமல்
நெடுமரமாய் நின்றாலோ, உலகோர் முன்னால்
அறிஞரைப்போல் நடித்தாலோ இரக்க மின்றி
அவர்களையும் நஞ்சூட்டிக் கொல்ல வேண்டும்.