பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12



வேல்கழுவும் செங்குருதிப் போர்ந டத்தும்
வேந்தரெனத் தோழியர்கள் அறிந்து, தண்ணீர்
கால்கழுவக் கொண்டுவந்தார் ; நீரோ என்னைக்
கைகழுவு நினைக்கின்றீர் ! பன்னீ ராலே
மேல்கழுவும் மன்னவரே ! நிலத்தில் ஏது
மின்னலென்று சொன்னதெல்லாம் பொய்யா? என்றன்
பால்கழுவும் முகக்குழந்தை தன்னை எண்ணிப்
பார்க்காமல் பேசுகின்றீர் ! நியாயந் தானா?

[தனிமையில் நடந்த இனிமை நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கூறி மங்கிய அவன் நெஞ்சத்தில் நினைவுச் சுடரைக் கொளுத்த முயற்சிக்கிறாள் சகுந்தலை. தன் கண்ணீரால் அவன் நெஞ்சைக் கரைக்கப் பார்க்கிறாள். அவள் முயற்சி பாறையில் அடித்த முளையாகி விட்டது. கண்ணீரில் நனைந்த அவள் சொற்களைக் கேட்டு எள்ளி நகையாடுகிறான் துஷ்யந்தன். குயில் பிற பறவைகளை ஏமாற்றி அவற்றின் கூட்டில் தன் குஞ்சுகளை வளர்க்கும். அதுபோல் அவளும் தன் வயிற்றுக் குழந்தையைப் பிறரிடம் விட்டு வளர்க்கப் பார்ப்பதாகக் குத்திப் பேசுகிறான்.இது வரையில் குற்றால அருவியாக இருந்த சகுந்தலை உடனே கொந்தளிக்கும் கடலாக மாறுகிறாள்.]

புல்மூடி யிருக்கின்ற கிணற்றைப் போலப்
பொல்லாத மன்னவனே !! நெருப்பி ரும்புச்
சொல்லாலே சுடுகின்றாய் ! எனது கற்பைச்
சொக்கட்டான் ஆடுகின்றாய் ! நாக்குத் தேனால்
நல்லவன்போல் நடித்துவிட்டு நெஞ்சு நஞ்சை
நடுங்காமல் கொட்டுகின்றாய் ! தெரிந்தி ருந்தால்
எல்லையினை மீறியவள் என்ற சேற்றை
என்மீது பூசிக்கொண் டிருக்க மாட்டேன்.