பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


101 அமைத்தார். தற்போது கோவிலில் உள்ள நடு மன்றமும், அதன் இரு புறமும் அமைந்துள்ள வண்ண வளைவுகளும், நாற்புறமும் தலை நிமிர்ந்து நிற்கும் கொத்தளங்களும் இவரால் அமைக்கப் பட்டவை. இக்கோவிலின் நடுமன்றம் ஒரு கலைக் கருவூலம். பளிங்குக் கல்லாலும், கருங்கல்லாலும் விவிலிய நூலில் வரும் கதை நிகழ்ச்சிகள் சிற்பங் களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்பச் செல் வங்கள் காண்போரிடம் நேரில் பேசுவது போலக் காட்சியளிக்கின்றன. இத்தேவாலயத்தின் மேல் விதானத்தில் மிகவும் அழகான வண்ண ஒவியங் கள் தீட்டப்பட்டுள்ளன. இவ்வோவியங்கள் யாவும் அக்காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த ஓவியக் கலைஞர்களின் கலைத் திறமைக்குச் சான்றுகளாக இன்றும் விளங்குகின்றன. இக்கோவிலின் முன்னுல் பெரிய முற்றம் ஒன்றுள்ளது. இது மிகவும் பெரியது. முந்நூரு யிரம் மக்கள் ஒரே சமயத்தில் திரளாகக் கூடி இம் முற்றத்தில் நிற்க முடியும். இவ்வெளி முற்றத்தி அலிருந்து கோவிலை நிமிர்ந்து பார்க்கும்போது மேலே பளிங்கில் பதிக்கப் பெற்றுள்ள எழுத்துக்கள் நம் கண்களுக்குப் புலப்படும். இவ்வெழுத்துக்கள் பார்ப்போருக்கு நன்ருகத் தெரிவதற்காக மிகப் பெரிய வடிவத்தில், மேலே செல்லச் செல்ல ஒவ் வோர் எழுத்தின் அளவும் கீழே இருப்பதைவிடப் பெரிதாக அமைந்துள்ளன. நெடுந் தொலைவி லிருந்து பார்த்தாலும் இந்தக் கோவிலின் சிகரம்