பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


102 நன்கு தெரியும். மிகப் பழமையானதும், பல நூற். ருண்டுகள் புனிதமானதென்று கருதப்பட்டது. மான இம்மண்ணிலிருந்து 141 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தளத்தில் பொன்னலான சிலுவை யொன்று வைக்கப்பட்டுள்ளது. இப் பொற். சிலுவையும், போப்பாண்டவருடைய இருக் கையும் எல்லாருக்கும் தெரியும்படி கோவில் மண்ட பம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் நடுமன்றத்தில் 43,000 மக்கள் ஒரே சமயத்தில் கூடி மண்டியிட்டுத் தொழுகை, நடத்தலாம். இறந்துபோன போப்பாண்டவர் களின் சவங்கள் இம்மன்றத்தில் அடக்கம் செய்யப் பட்டுள்ளன. இக்கோவிலில் வழிபாட்டிடங்: களாகத் தனித்தனியே இருபத்தேழு இடங்கள் உள்ளன. பல மொழிகளில் அங்கு விவிலிய நூல் படிக்கப்படுகிறது. புனித பீட்டர் அடக்கம் செய் யப்பட்ட இடத்தில் பாதிரிகள் சென்று பாவ மன் னிப்புக் கேட்பர். நம் நாட்டுக் கோவில்களில் உக்கிராண அறை. ஒன்றுண்டு. அதே போல இக்கோவிலிலும் உக் கிராண அறை உண்டு. இதைப் புனிதக் கருவூலம் (Treasury of Sacristy) 6T65, Lt. §siré Joopuisb கோவிலைச் சேர்ந்த நகைகளும், தங்கத்தால் செய். யப்பட்ட சிலுவைகளும் வைக்கப் பட்டிருக்கின் றன. உலகத்திலுள்ள எல்லா வகையான நாண யங்களும் பதக்கங்களும் இங்கு உள்ளன. விலை மதிப்பற்ற மாணிக்கங்களும், நவரத்தினக் கற்களும் இங்கு அளவு கடந்து சேர்த்து வைக்கப் பட்டிருக்