பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


103 கின்றன. 28,000 வகையான உயர்ந்த இரத்தினக் கற்கள் இங்கு உள்ளன. இவற்றை வகைப்படுத் தித் தனித்தனியே சிறு அறைகளுடைய மரப் பெட்டியில் பேணி வைத்திருக்கிருர்கள். சிற்பக்கலையும் ஓவியக்கலையும் செழித்து வளர் வதற்கு நம் நாட்டிலும் சரி, மேலே நாட்டிலும் சரி, சமயங்களே பெருந்துணையாக இருந்திருக்கின்றன. சமயக் கடவுளரின் உருவங்களையும், புராண நிகழ்ச் சிகளையும் சிற்பங்களாகச் செதுக்கியும், ஓவியங்க ளாகத் தீட்டியும் கலைஞர்கள் இவ்விரு கலைகளையும் வளர்த்தனர். பெளத்தர்கள் புத்த பெருமானின் திருவுருவத்தைப் பல வடிவங்களில் செதுக்கினர். இந்துக்கள் கோவில்களில் இறை வடிவங்களையும், புராண நிகழ்ச்சிகளையும் கல்லில் வடித்தனர். இந் நூற்ருண்டில் வாழ்ந்த தலைசிறந்த இந்திய ஓவிய ரான இராசா இரவிவர்மா அவர்கள் கூட கண்ணன், இலக்குமி, கலைமகள் ஆகிய கடவுளரின் ஓவியங் களைத் தீட்டியே ஓவியக் கலையை வளர்த்தார். இதே போன்று மேலே நாட்டுச் சிற்பக்கலையில் ஏசுவின் திருவுருவம் பெரிய மறுமலர்ச்சியை உண் டாக்கியது. விவிலிய நூலில் கூறப்பட்டுள்ள கதை நிகழ்ச்சிகள் ஓவியக் கலையில் பெரிய புரட் சியை உண்டு பண்ணின. ஏசுவின் திருவுருவத்தை எவ்வெவ்வாறெல்லாம் வடிக்க முடியுமோ அவ்வவ் வாறெல்லாம் வடித்து மேலே நாட்டுச் சிற்பிகள் அழகு பார்த்தனர். இக்கலைச் செல்வங்களையெல் லாம் கத்தோலிக்கர்கள் இக்கோவிலில் கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர். போப்பாண்ட