பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


109 சிமெண்டுப் பலகைகளாலும் அமைக்கப்படுகின் றன. தூண்களில் பலகைகள் செருகுவதற்குத் தேவையான இடைவெளிகள் விடப்பட்டிருக்கும். இது போன்ற கட்டடங்களேத் தேவையான பொழுது, பிரித்து எடுத்துச் சென்று வேறு இடங்களில் அமைத்துக் கொள்ளலாம். நம் நாட்டில் கட்டடங் களில் வெளிப்புறச்சுவர்(Compound walls)அமைப் பதற்கு மட்டும் இம்முறை கையாளப் படுகிறது. புறக்காழ்க் கட்டட முறை (Hollow block building): செங்கற்களைப் போல் சிமெண்டினல் பெருங்கற்கள் செய்யப்படுகின்றன. சிக்கனத்தின் பொருட்டு இடையில் தொளை விடப்பட்டு இக்கற். கள் அமைக்கப் பெறுகின்றன. இக்கற்களே ஒன் றன்மேல் ஒன்ருக அடுக்கிச் சுவர்கள் எழுப்பப் படுகின்றன. இம்முறையைக் கட்டடங்களின் உட்புறச்சுவர்கள் அமைக்கக் கைக்கொள்ளு. கின்றனர். இடச்சுருக்கம் : உலக மக்களின் எண்ணிக்கை தாள்தோறும் நூருயிரம் நூருயிரமாகப் பெருகிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப மக்களின் குடி யிருப்புக்களும் பெருகிக் கொண்டிருக்கின்றன. வீட்டு நிலங்களின் விலையும் ஒன்றுக்குப் பத்தாகப் பெருகிக்கொண்டிருக்கிறது. எனவே சிறு இடத்தை. வாங்கி அதில் பல வசதிகளையும் செய்து: கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. ஒரு. வீட்டை எடுத்துக் கொண்டால் அதில் குறுக்குச் சுவர்கள் பல இருப்பதைக் காணலாம். இச் சுவர்களே மிகவும் மெல்லியவையாகக் கட்டினல்