பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


81 கலைக் கோவில்களில் இதுவும் ஒன்று. கி. பி. 1565 ஆம் ஆண்டு மொகலாயப் பேரரசின் புகழுக்கும் பெருமைக்கும் காரணமாக விளங்கிய அக்பரின் தாயும், உமாயூனின் மனைவியுமான அமிதா பானு பேகத்தில்ை இச்சமாதி எழுப்பப்பட்டது. சிற்பக் கலையழகில் தாஜ்மகாலுக்கு அடுத்த நிலையில் வைத்து உமாயூன் சமாதி பேசப்படுகிறது. இச்சமாதியில் நிலைத்த நம் பார்வையைத் திருப்பினல் பிரோஜ்ஷா கோட்லா தென்படும். அதை அடுத்து ஜும்மா மசூதியின் உச்சிப் பிறைக் கோளங்கள் தென்படும். மொகலாயப் பெரு மன்னர்களின் மதிப்பிற்குரிய தொழுகையிடம் இதுவே. ஜும்மா மசூதிக்கு அடுத்தாற்போல் நம் கண்ணில் படுவன சப்தர் ஜங்கின் சமாதியும், புது டில்லியும் ஆகும். கடைசியாக நம் கண்ணில் படுவது தென்மேற்குப் பகுதியில் காணப்படும் பாறைக் கூட்டம் ஆகும். அப்பாறைக் கூட்டத் தின் நடுவில் சுல்தான் காரியின் அழகிய சமாதி யைக் காணலாம். இவ்வரலாற்றுச் சின்னங்களே யெல்லாம் இணைக்கும் பாதைகள், இருபுறங்களி லும் செழித்த பசுமரங்களைக் கொண்டு விளங்கு கின்றன. மேலே கூறப்பட்ட இவ்வளவு காட்சிகளையும் குதுப்மிஞரின் உச்சியிலிருந்து உளங்குளிரக்கான லாம். இத்தகைய அழகுக் காட்சிகளை உரோமா புரியிலன்றி, உலகில் வேறெங்கும் காண முடியாது.