பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} {} மன்னர்கோட்டை ராஜா சொல்வது தெச்சணஞ் சென்றிடக் காரணமேன் தீரனே செப்பிட வேண்டுமையா செல்ல பொம்முதுரை சொல்வது பன்னீர் வருட மழையிமில்லாப் பஞ்சத்திலைதன் பஞ்சத்தினால், பஞ்சத்தினுல்சென்ற கம்பளத்தைப் பார்க்கவேண்டுமிடர் நீக்கவேண்டும். மன்ஞர்கோட்டை ராஜா சொல்வது முந்தின கம்பளம் போனலும் பிந்தின நீரங்கு போகவேண்டாம். பஞ்சத்தைப் போக்குதற் கிங்கிருந்தால் நெஞ்சத்திற் சற்றுங் கவலை வேண்டாம். செல்லபொம்முதுரை சொல்வது தாயிடம் பிள்ளை சென்ருலுஞ் செய்யத்தக்க விருந்துநாள் மூன்றல்லவோ. மூன்று நாளைக்குள்ளே போகாவிட் டால் முக்காடு போட்டழு வார்களேயா, போக விடை தர, வேண்டுமையா, புண்ணியனே தடையில்லாமல், மன்ஞர் கோட்டை ராஜ சொல்வது சக்கம்மாள் பக்கத்திருந்து மிந்தச் சங்கடமாகுமா மன்னவனே சங்கட மில்லாமற் சென்றிடுவீர் சக்கதேவி துணைபக்கமுற. செல்ல பொம் முதுரை புறப்பட்டு என்னை யாண்டவளே என்று பாடிக்கொண்டு தங்குகின்ற இடமெல்லாங் தங்கி குருமலை சேர்ந்தவுடன் இவ்விடந்தான் சரியென்று ஆலோசனை செய்கிறது-மேற்படி சந்தம் தம்பிகாளை பொம்முதுரை தங்குமிடந்தனைப் பார்த்தனையா? ஆடுகள் மாடுகள் மேய்வதற்கும் அப்பு:றந் தண்ணிர் குடிப்பதற்கும் காலிநிலமிது போல் நமக்குக் கண்ணிலே பார்க்க முடியாது. காளை பொம் முதுரை சொல்வது அண்ணுவே அண்ணுவே கேளுமையா அன்புடன் தம்பிநான் சொல்லுகிறேன்