20
வெள்ளாண்மை இல்லை, விளைவு மில்லை, வேந்தர்கள்காவலையல்லாமல். நஞ்சையுமில்லை, நடவுமில்லை, ராஜாக்கள் காவலை யல்லாமல், புஞ்சையும் இல்லை, பொழியுமில்லை, பூவேந்தர் காவலையல்லாமல். காவலர் தம்மை வணங்கிக் கொண்டால் கண்டாலுந் துன்பங்கள் - செய்யமாட்டார். சொற்றவர் தம்மை வணங்கிக் கொண்டால் கும்பிட்ட கைகட்டு வெட்டுமில்லை. அப்படியே நமக்கான தெல்லாம் அமைக்கவேண்டு மிமைப்பொழுதில்.
செல்ல பொம் முதுரை சொல்வது
ஆடுகள் மாடுகள் வாழ்வதற்கு மஞ்சாது நாமரசாள்வதற்கும், மண்டிலே கம்பளி போடுதற்கும், வந்த குறிகளுரைப்பதற்கும், சக்க தேவி வசிப்பதற்குத்தக்க இலந்தைமுட் புக்குதற்கும், காட்டெலியு மொருகாப்புக்குள்ளே கோட்டெலியோடு வசிப்பதுபோல், கோட்டெலிக்குப் புடையானலுஞ் சொந்தப்புடை வேண்டு மென்பதுபோல், நமக்குரிய குடிசையிலே நம்மைவணங்கிட வாழவேண்டும்.
காளைபொம்முதுரை சொல்வது
அப்படியே செய்து வாழ்ந்திடுவோம் ஆண்டவள் பாதத்தைப் போற்றிடுவோம். ஆண்டவள் பாதத்தைப் போற்றுவதால் அச்சமில்லை அவள் பச்சமுண்டு.
செல்ல பொம்முதுரை குடிசைகட்டி வசித்து வருகிறநாளில் ஆட்டுக்காரர். இவர்களைக் கண்டு செக்காரக் குடியிலுள்ள கம்பளத்தாரிடஞ் சொல்வது-ஆட்டுக்காரர் கம்பளத்தாரை வணங்கல்-மேற்படி சந்தம்
கம்பளத்தார்குலப் பார்த்திபரே காரணரே உம்மைக் - கும்பிடுறோம்.
22. மண்டு - குடியிருப்பு.
28. கம்பளத்தார் தற்காலத் தொழில் இது. பூர்வ காலத்தில் ஆடு, மாடு வளர்த்தல்.
24. புடை - வளை, (எலி வளை)