உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38



கட்ட பொம்முதுரை சொல்வது-மேற்படி சந்தம்

பாஞ்சால நாட்டுக்குத் தானாபதிப் பட்டங் கொடுக்கிறேனுந்தனுக்கு
கேட்டதோர் சம்பளம் நான்தருவேன் க்யாதியு மெத்த உண்டாகுமையா
மாதத்திற் கை நூறு பொன்தருவேன் மன்னவன் பக்கமிருந்
தீரானல்,
திங்களுக் கைநூறு பொன்தருவேன் சீமைக் கணக்கு முடித்தீரானால்.

கட்டபொம்முதுரை ஆயிரம் கம்பளம் நூறு பரிவாரத்துடன் அரசு புரிதல்-மேற்படி சந்தம்

தம்பிதம்பி ஊமைத்துரை சக்கம்மை பாதிவிசேஷ மதால் பாஞ்சைப் பதியிலே கோட்டையிட்டோம் பார்த்தவர் நெஞ்சந் திடுக்கிடவே, ஆயிரம் கம்பளம் நூறு பரிவாரம் அஞ்சாத சேனைகள் சூழ்ந்திடவே, கட்டியக் காரர் பராக்கெனவே கம்பளத்தார்கள் சபா செனவே, மார்பிலே சந்தண வாடையிலே மல்லிகை வாடை கமகமென. கையிலே கங்கணங் கட்டையிலே காதிற்கடுக்கன் பளீரெனவே, முத்துச் சரப்பளி மாலையிலே மோகன மாலை பளீரெனவே, வஷதிரமோதிரக் கற்களிலே மாணிக்கக் கிரீடம் பளீரெனவே, தங்கத்தில் வார்த்திடுஞ் சிங்கமுகத் தண்டியல் மீது கொலு விருந்தேன்.40

{{center|இந்தப் பிரகாரம் கட்டபொம்மு துரை அரசு புரிந்து வரும்போது

கவர்மெண்டாருக்கும் நாட்டுக்கு மொப்பாத காரியங்களால்
மற்றப் பாளையப்பட்டாரால் சென்னைக்குக் கடிதம் எழுதல்
மேற்படி சந்தம்}}

இங்கிலீஷ் கொடியுள்ள நாளையிலே இப்படியுமொரு செய்தி
யுண்டோ?
பீரங்கிக் குண்டுள்ள நாளையிலே பின்னிட்டு நிற்கவும் ஞாயமுண்டோ


40. இதன்படி பாஞ்சாலங் குறிச்சி முதல் ஜமீன்தார் வீரபாண்டிய கட்ட பொம்மு என்றாகிறது. வரலாற்றுப்படி இது உண்மையல்ல. சிலர் 48 தலைமுறைகளாசவும் சிலர் 6 தலைமுறைகளாகவும் கட்டபொம்முவின் முன்னோர்கள் பாஞ்சாலங் குறிச்சியை ஆண்டதாகக் கூறுகிறார்கள். வெள்ளை அதிகாரிகள் குறிப்பிலிருந்து கட்டபொம்முவின் முன்னோர்களின் நான்கு பரம்பரைகளை அறிய முடிகிறது.