பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தானபதி சொல்வது நான் பெற்ற பிள்ளைக்குக் கல்யாணம் நடத்துதற்கு நெல் - வேண்டுமையா, அருமைப் பிள்ளைக்குக் கல்யாண மன்புடன் செய்திட வேண்டுமையா, கட்டபொம்மு துரை சொல்வது உமக்குப் பிள்ளை யென்றுற்ற தளுலெமக்கும் பிள்ளைதான் தானபதி அருமைப் பிள்ளைக்குத் தாலிகட்ட ஐநூறு கோட்டை நெல் போதாதா ? தானுபதி சொல்வது ஐநூறுகோட்டை நெல்தந்தாலும் பழப்பந்திக்குக் காணுது முந்நூறு கோட்டை நெல் தந்தாலு முறுக்குப் பந்திக்குக் காணுது. தொண்ணுறு கோட்டை நெல் தந்தாலும் தோசைப் பந்திக்குக் காணுது. கட்டபொம்முதுரை சொல்வது-மேல்படி சந்தம் சின்னக்குளம் விளைந்ததானுல் சீரகச் சம்பா நெல்தாரேன் பெரியகுளம் விளைந்ததால்ை பேர்ப்போன சம்பா நெல்தாரேன் ஆரக்குளம் விளைந்ததாளுல் ஆனக்கொம்பன் சம்பா நெல் தாரேன் சாலிகுளம் விளைந்ததானுல் தடையில்லாமலே நெல்தாரேன் கட்டபொம்முதுரை இப்படிச் சொல்ல மனப் பொருமையில்ை ஊமைத்துரையிடஞ் சொல்ல அவர் மற்றக் கம்பள வீரர்க்கு அறிக்கை செய்து கம்பெனியார்க்கு இடைஞ்சல் செய்து பாண்டியத் தேவனைக் கொலைசெய்ததை அறிந்த கருப்பாயி பாளையங்கோட்டை சின்ன மெக்காலே, பெரியமெக்காலே துரைககுச் சொல்லி முறையீடல்-மேற்படி சந்தம் தர்மத்துரைகளே கேளுமையா தஞ்ச முண்டோ வேறே எங்களுக்கு எட்டுத்திசையும் பதினறு கோணமு மெங்கு செயம் பெற்ற கட்டபொய்மு கட்டபொம்மு தம்பி ஊமைத்துரை கணக்குப் பிள்ளையாந்தானபதி