பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔷岔 யுத்த ஆரம்பம்- என்னையாண்டவளே என்று பாடிக் கொண்டே லாகை பாய்வது-அப்போது காலன் துரை சொல்வது விருத்தம் வெள்ளைய னென்றுரைக்கும் வீரனும் நீ தாளுெடா பிள்ளையென்றுன்னைப் பேணிப் பிரியமாய் வளர்த்தாரோ சொல். கள்ளமும் கவடு சூதும் கருணையில்லாமல் நாட்டை கொள்ளைகளடிப்பதற்குக் கும்புகள் கூடினரே தன்னனச் சந்தம் நில்லடா நில்லடா பாதர்வெள்ளை, நேர்நின்று சண்டைகள்

  • செய்ய வேண்டும். வாகனத் துளைத்திடுங் குண்டு முன்னே வந்தவர் மீளவு மார்க்க முண்டோ ? மேருவைத் துளைத்திடுங் குண்டு முன்னே வெற்றி

- - யடைந்திடக் காரணமோ ? டப்பென்று குண்டுகள் போடையிலே குப்பென் றெழும்புதே தீப்பொறிகள். காலன் வலையில் சிக்கச்செய்வேன் காருண்ய மில்லாத உன் உயிரை. ஏமன் வலையில் சிக்கச்செய்வேன் எங்கே டோனலும் உன்னை விடேன். வெள்ளையன் விருத்தம் நிற்பவர் சுத்த வீரர் நியாய மில்லாமல் நானே தப்புகள் செய்யமாட்டேன் சண்டைகள் புரியும்போது மற்புரிச மயமுன்னே வைத்த கால் பின் வைக்கேன் இப்பொழு தென்ன கார்ய மியற்றினு மியற்று வாயே தன்னனச் சந்தம் சிட்டுப் பறக்காத பாஞ்சையிலே சிட்டுப் பறக்கவும் கால முண்டோ? காகம் பறக்காத பாஞ்சையிலே காகம் பறக்கவும் நீதியுண்டோ? 50. கும்புகள்-கூட்டம் 51. மேரு ம8ல (புராண மலை)