பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

நீங்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்” என்றும், “அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால், பிழவாழி நீந்தல் அரிது” என்றுங் கூறினர். மேலும், திருவடிப்பேறு ஞானப்பேருகும். இறைவன் திருவடி, ஞானமே என்பதைத் திருமங்திரப் பாடலாலும் தெள்ளத்தெளிய உணரலாம்.

வள்ளுவனார் பிறவிப் பெருங்கடல் நீந்துதற்கு மட்டும் கடவுள் திருவடியினைச் சேருமாறு வற்புறுத்திலர். இறைவன் இணையடியினைச் சேரப் பெற்றவர் இம்மை உலகத்துமட்டும் இன்றி, அம்மை உலகத்திலும் நீடுவாழ்வர் என்றும், எந்த இடத்தும் துன்புறார் என்றும், மனக்கவலை மாற்றி இன்பக் கடலில் ஆழ்வர் என்றும் கூறினர். ஆம், இறைவன் திருவடி அத்துணையும் தரவல்லதுதான். நம் வள்ளுவனார் கருத்தை ஒட்டியன்றோ வாகீசர், இறைவன் திருவடியினைப் பற்றிப் புகழ்ந்து பேசுகையில்,

சிந்திப் பரியன சிந்திப் பவர்க்குச் சிறந்துசெந்தேன்
முக்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்புசுற்றி
அந்திப் பிறைஅணிந் தாடும் ஐ யாறன் அடித்தலமே

எனக் குதுகலத்துடன் கூறுவராயினர்.

வள்ளுவர்க்குத் திருவடிப்பேற்றைப் பெறுவதோடு மக்கள் நில்லாமல், அவனது புகழையும் எந்நேரமும் இடைவிடாது சிந்தித்த வண்ணமும் செப்பிய வண்ணமும் இருத்தல்வேண்டும் என்பதும் உள்ளக்கிடக்கையாகும். அப்படி எண்ணினுல்தான் எந்தவிதமான வினைகளும் அவர்களை அணுகா என்று வ ற் பு று த் தி க் கூ று கி றா ர். இக் கருத்துத் தானே “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” என்ற குறட்பாவில் தெரிகிறது? சுந்தரர் தாம் இடைவிடாது இறைவனைச் சிந்தித்த வண்ணம் இருந்தார் என்பதை “நற்றவா உனை