பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. சேக்கிழாரும் கம்பரும்

திருவளர்ந்தோங்கும் இப்பரத கண்டத்துத் தெய்வப் புலவர் என்னும் பட்டம் பெற்ற புலவர் சிகாமணிகள் இருவரே. ஒருவர் உலகம் புகழும் உத்தமராம் திருவள்ளுவ நாயனார். மற்றொருவர் சைவ மணங்கமழும் சேக்கிழார் பெருமானார். இவ்விரு பெரும்புலவர்கட்டு அமைந்துள்ளபேறு, வேறு எப்புலவர்களும் எய்திற்றிலர் என உறுதியாக உரைத்து விடலாம். இங்ஙனம் கூறுதற்குப் பலகாரணங்கள் உள. ஏனைய புலவர்கள் தனித்துவிளங்கும் நூல்வடிவில் புகழத்தக்க பெருமைபெற்றிலர். அப்புலவர்களின் சிறப்பையும் அவர்கள் யாத்த நூலின் மாண்பையும் புகழும் முகத்தால் சிற்சில தனிப் பாடல்கள் மட்டும் உள்ளன. அவை அவ்வப்புலவர்களின் நூற்களுக்குச் சிறப்புப்பாயிரச் செய்யுட்களாகத் திகழ்கின்றன, அவை தனியன்கள் என்றும் சாற்றப்பெறும். ஆனால், திருவள்ளுவரையும் அன்னர் இயற்றிய நூலின் பெருமையையும் கூறும் தனிநூல் திருவள்ளுவமாலை என்றே திகழ்ந்து வருகிறது. இதுபோலவே, நம் சேக்கிழார்பெருமானரையும் இவர் திருவாய்மலர்ந்த பெரியபுராணத்தையும் சிறப்பித்துப் பேசும் தனிநூல் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்பது. இந்தத் தனிப்பெருமையுடன் மட்டும் இப்புலவர் பெருமானர் புகழப்படுதலன்றிக் கொற்றவங்குடி உமாபதி சிவச்சாரிய சுவாமிகள் தம் திருவாக்காலும் சேக்கிழார்மீது புராணம் பாடியிருத்தலையும் நாம் பாராட்டாமல் இருக்க இயலாது. அப்பெரியார் தண்டமிழ் மேலாந்தர நூல்களாகச் சிலவற்றை விதந்து கூறுகை-