பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இத்துணைப் புகழ்உரைகளும் உண்மை உரைகளே அன்றிப் புனைந்துரைகள் அல்ல. உண்மையாகவே கம்பரது கவிகள் அத்துணையளவு சுவை பயக்கவல்லவைகளாக உள்ளன. கம்பரையே சில அறிஞர்கள், "ஐய! புலவர் மணியே! உமது கவிகள் மிக்க நயமுடையனவாகவும் சுவையுடையனவாகவும் உள்ளனவே; இன்னதற்குக் காரணம் உளதோ?" என வினவினார்களாம். அதுபோது கம்பர் என் கவிகள் சுவையுடையனவாய் இருத்தற்கு யான் காரணன் அல்லேன். அது அதில் ஒவ்வோர் அகப்பை அள்ளிக்கொண்டேன். அதாவது எனக்கு முன்பு இருந்த புலவர் பெருமக்களின் சொற்களையும், தொடர்களையும், கருத்துக்களையும் அப்படியே எனது நூலில் அமைத்துப் பாடியுள்ளேன். இவையே என்கவிகள் சிறத்தற்குக் காரணமாகும்" என்றனராம். இஃது உண்மை என்று உறுதிப்படுத்தற்குத் திருமணம், செல்வக்கேசவராய முதலியார் எம். ஏ. (பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்ப் போராசிரியர்) எழுதியுள்ள "கம்பர் என்னும் நூலே சான்றாகும். அதில் பல தலைப்புக்களைக் கொடுத்து எழுதிய அறிஞர், கம்பர் பயின்ற நூற்களைக் குறிப்பிடும்போது சைவத் திருமுறைகளையும் குறிப்பிட்டுள்ளார். எனவே, கம்பர் பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணத்தினையும் நன்கு பயின்றவர் என்பது புலனுகிறது. பயின்றதோடு நில்லாமல் பற்பல அரியசொற்களையும், தொடர்களையும், கருத்துக்களையும் அப்பெரு நூலினின்றும் எடுத்து மிகமிகப் பொருத்தமான இடங்களில் அமைத்துத் பாடியுள்ளார் என்பதை அறிவிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கம்பர், சேக்கிழார் பெருமானாரது காலத்திற்குப் பிந்தியவர். கம்பர், இரணடாம் இராஜராஜ சோழர் காலத்தவர். அதாவது, கி.பி. 1171 முதல் 1178-ஆம்