பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69முதலிய பெயர்களைக் காட்டலாம். எனவே, சீத்தலைச் சாத்தனாரால் பாடப்பட்ட பாண்டியன் சித்திரகூடத்தில் பூத உடல் நீத்துப் புகழ் உடல் பெற்றவன்.

இம்மன்னனைப் பற்றி இப்புலவர் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் நீண்ட பாடலும் அன்று; குறுகியபாடலே. அக்குறுகிய பாடலில் இம்மன்னன் வீரம், கொடை முதலியன சுருங்கச் சொல்லி விளங்க வைத்த பெருமை சீத்தலைச் சாத்தனாரையே சாரும். சுருங்கச்சொல்லி விளங்க வைக்காதார் அல்லரோ ஒன்றைப்பாரித்துக் கூறுவர். இவ்வாறு பாரித்துக் கூறுபவரையே வள்ளுவனார் இழித்துக் கூறுகிறார். அவர்களை எத்துணை நாகரிகமான முறையில் பழித்துக் கூறுகின்றார் பாருங்கள்!

"பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்"

என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைக்காத வரைப்பற்றி வள்ளுவர் கொண்ட கருத்து.

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன் மாறன் நல்ல கம்பீரமான தோற்ற முடையவனாய் இருந்திருக்க வேண்டும். அவன் தோற்றப் பொலிவை நம் கண்முன் கொணர்ந்து காட்ட, அவனைப் பற்றிக் கூறும்போது, சீத்தலைச் சாத்தனார், மாலை தொங்கப்பட்ட அழகு விளங்கப்பட்ட மார்பையும், முழந்தாள் வரை நீண்ட கையையும் உடைய மாட்சிமைப்பட்ட பாண்டியன் எனபதை,

" ஆரம் தாழ்ந்த அணிகிளர் மார்பில்
தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதி'

என்று கூறிச் சிறப்பித்தார். இத்தகைய தோற்றப் பொலிவுடைய மன்னன் வீரம் உடையனாய் விளங்கி