பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

அறியா தோரையும் அறியக் காட்டித்

திங்கள் புத்தேள் திரிதரும் உலகம்"

என்னும் புறநானூற்றைத் தழுவியது.

“ஊருணி நிறையவும் உதவும் மாடுயர்

பார்கெழு பழுமரம் பழுத்தற் றாகவும்”

என்பது,

“ஊருணி நீர்நிறைந் தற்றே"

என்றும்,

“பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்”

என்றும் உள்ள குறட்பாக்களை நினைவூட்டுகின்றன.

கருமுகில் தாமரைக் காடு பூத்துநீ
டிருசுடர் இருபுறத் தேந்தி யேடவிழ்
திருவொடும் பொலியஓர் செம்பொன் குன்றின்மேல்

வருவபோல் கலுழன்மேல் வந்து தோன்றினன்

என்பது. “கருமாணிக்க மலைமேல், மணித்தடந் தாமரைக் காடுகள் போல் திருமார்பு, வாய், கண் உந்திகை காலுடை ஆடைகள் செய்யபிரான்" என்னும் திருவாய் மொழியின் கருத்தைச் சார்ந்ததே. இந்த எடுத்துக்காட்டுக்களினால் கம்பர் “முன்னோர் மொழி பொருளே அன்றி, அவர் மொழியும் பொன்னே போல் போற்றுவம்” என்ற கருத்தினை உளத்தில் கொண்டு தம் நூலைக் கவினுற யாத்துள்ளார் என்பது அறிய வருகின்றது. மேலே காட்டிய மேற்கோள்கள் கம்பரது பரந்த கல்வியறிவுடைமைக் குரிய அகச்சான்றுகளாக அமைவனபோலப் புறச்சான்றாகக் கம்பரே ஒருசமயம் தம்மை நோக்கி வினவினார்க்குத் தாம் அதில் அதில் ஓர் அகப்பை அள்ளிக் கொண்டேன். என்று கூறியதாகக் கூறப்படும் சொற்றொடரைக் கொள்ளலாம். அதில் அதில் ஓர் அகப்பை அள்ளிக் கொண்டேன்