பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“என்பதன் பொருள், எனக்கு முன்னிருந்த நூற்களின் கருத்துக்கள் சிலவற்றை முகந்து எடுத்துக் கொண்டு, என் நூலில் அமைத்துக் கொண்டேன், ”என்பதன்றோ?

சேக்கிழார் பெருமானார் தம் நூலினை “உலகெலாம்” என்ற தொடரை முன்னதாக அமைத்துத் தொடங்கியுள்ளார்.

இவ்வுலகெலாம் என்னும் தொடரைச் சேக்கிழார் பெருமானார் தாமே படைத்துக் கொண்டு தம் முதற்செய்யுளை யாத்திலர். இத் தொடர் கூத்தப் பொருமானாரது கூர்த்த அருளால் தொண்டர் சீர்பரவுவார்க்கு எடுத்து மொழியப்பட்டதாகும். ஆகவே, அவ்வாக்குப் பசுவாக்கு ஆகாமல் பதிவாக்காயிற்று. அப்பதிவாக்கை முதலிடத்து மட்டும் வைத்துப் போற்றாமல், தம் நூலின் இடையிலும் கடையிலும் வைத்துப் போற்றியுள்ளார், சேக்கிழார், இடையில் வைத்துப் போற்றிய இடம், ஆளுடைய பிள்ளையார் இறைவர் கொடுத்த நித்திலச்சிவிகையில் இவரும் போதாகும். அதுபோது

“அஞ்செழுத் தோதி ஏறினார் உய்ய உலகெலாம்”

என்றுபாடிக் களித்தார், பின் தம் நூலை முடித்து வாழ்த்துக் கூறுமுகத்தால்,

வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்.

என்று பாடி இன்புற்றார். இதனைப் பாராட்டி, மகா வித்துவான் தரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் தாம் பாடிய சேக்கிழார் பிள்ளைத் தமிழில், “உலகெலாம் எனும் சுருதி நாப் பண்ணும் ஈற்றும் பொருத்திப் பேர்கொண்ட” என்று பாடியும் காட்டினார்.

இங்ஙனம் சேக்கிழார் செய்தது போலவே, கம்பரும் தம் நூலில் மூவிடத்து வைத்துப் பாராட்-