பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுந்தருளி, கம்மை அயர்ந்தனையோ பாடுதற்கு ? என்று நினைவுறுத்தித் தூண்டுவாராயினர். இதனைத் திருஞானசம்பந்தரே,

துஞ்ச வருவாரும் தொழுவிப் டாரும் வழுவிப்போய் நெஞ்சம் புகுந்தென்னே வினேவிப் பாரும் முனைகட்பாய் வஞ்சப் படுத்தொருத்தி வாளுள்கொள் ளும்வகைகேட் டஞ்சும் பழையனூர் ஆலங் காட்டெம் அடிகளே

று பாடி அறிவிப்பார் ஆயினர்.

இதில், 'நெஞ்சம் புகுந்தென்னே கினேவிப்பாரும் என்று குறிப்பிடப்பட்டது, ஆலங் காட் டப் பர் ஆளுடைப் பிள்ளேயாரின் கனவில் கூறிய நம்மை அயர்ந்தனேயோ பாடுதற்கு ? என்பதைத் தெள்ளென. வெளிப்படுத்துவதாகும். இவ் வ ரு ள் பா ட் டி ன் பொருளை நன்கு உணர்ந்தே தொண்டர் சீர் பரவுவா ராம் தொல்லாசிரியர், சீர்காழிச் செம்மல் திருவாலங் காட்டுக்கு எழுந்தருளிய விதத்தின் சிறப்பியல்பினேத் திறம்பட இயம்பலானர். இக் குறிப்பினின்று பாலரு வாயர் பரமனுர் பதியாம் திருவாலங்காட்டை மிதிக்க அஞ்சிக் கோயில் புகாது அயலே தங்கியதற்கு அம்மை யார் சென்னியால் நடந்த பதி என்பதே காரணம் என்பது புலகிைறது. இதல்ை புனிதவதியாராம் காரைக்கால் அம்மையார் தமிழ் விரகராம் திருஞான சம்பங்தருக்கு முற்பட்டவர் என்பது ஐயம் திரிபற அறியக்கிடக்கின்றது அன்ருே ?

மேலும், தோணிபுரத்தோன்றலார் சிறுத்தொண்ட காயனரால் வரவேற்கப்பட்டு நன்முறையில் உபசரிக்கப் பட்டார் என்பது ஞானபோனகம் உண்டார் வரலாற்றி