பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊறும் அறிவு எனவும், உள்ளுநர் உள்ளும் பொருள் எல்லாம் உண்டென்ப வள்ளுவர் வாய்மொழி மாட்டு’ எனவும், உள்ளிருள் நீக்கும் விளக்கு' எனவும், உள்ளக் கமலம் மலர்த்தி உளத்துள்ள தள்ளற்கு அரிய இருள் தள்ளுதலால்-வள்ளுவனர், வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்கும் எனவும், சிங்தைக்கினிய செவிக் கினிய வாய்க்கினிய வந்த இருவினைக்கு மாமருந்துவள்ளுவனர் பன்னிய இன்குறள் வெண்பா' எனவும், "வள்ளுவர் பன்னிய இன்குறள் வெண்பா அகிலத்தோர் உள்ளிருள் நீக்கும் ஒளி'எனவும், வள்ளுவர் பாட்டின் வளம் உரைக்கின் வாய்மடுக்கும் தெள்அமுதின் தீஞ் சுவையும் ஒவ்வாதால்" எனவும் போற்றிப் புகழ்கிறது. ஆகவே, இவ்விரு பெரியோர்களின் ஒத்த கருத்துக் களேயும் பெருமைகளையும் உணர்ந்த நாம் அவர்களின் கருத்துக்களே நன்குணர்ந்து அவற்றின்படி ஒழுகல் கடமை ஆகும்.

  • ---twبنجم-حیچ جیsبہم ممسند