பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. தூது

வள்ளுவர் வகுத்துக்கூறும் அதிகாரங்களில் தூதும் ஒன்று. இப்பகுதியில் தூதுரைப்பவர்களின் இயல்புகள் அனேத்தும் இனிதின் இயம்பப்பட்டுள்ளன. தூதர் பண்பு இன்னது என்பதை முன்னர் அறிந்த பின்பு, இப்பண்பமைந்த தூதர், தாது இயம்பிய முறைகளே உணர்தல் எளிதாக இருக்கும் என்னும் எண்ணம் கொண்டே, தாதர் பண்பு முன்னர் விளக்கமாக எழுதப் படுவதாயிற்று

தூது உரைப்பவர்களில் இருவகையினர் உளர். ஒரு வகையினர் தம்மைத் தூது சென்று வருமாறு அனுப்பியவர் கூறியவற்றைக் கூறி வருபவர்களும், தாமாகவே சமயத்துக்கேற்பத் தம் கருத்தை வகுத்துக் கூறுபவரும் ஆக இருவகையினர் ஆவர். இனி, இவர்கள் பண்பைச் சற்றுப் பார்ப்போமாக, தூதுரைப்பவர் தம் சுற்றத்தவரிடத்து அதாவது தம்மைச் சார்ந்தவரிடத்து அன்புடையராயும், 5ற்குடி பிறப்பினராயும் இருத்தல் வேண்டும். தமக்குமுன் தம் மரபில் தூது சென்றவர் எவரேனும் இருப்பின், அவர்களின் இயல்பையும் கேட்டு அறிந்துகொள்ளுதல் வேண்டும். தூது உரைப்பதில் தம் சுற்றத்தவர்க்கு யாதொரு தீதும் வராமல் காத்துக் கொள்ளவேண்டும். இவர்களது பேச்சு வன்மையால் எதிரிகளும் தம் வயத்தராதல் வேண்டும்.