பக்கம்:கட்டுரை வளம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமாயணப் போர்க்களங்கள் 105

இதனால் உலக வரலாறு போர்க்களங்கள் பல வற்றினைச் சந்தித்துள்ளது; சந்தித்தும் வருகின்றது. போரே இல்லாத சமுதாயம், உலகப்பேரரசு ஏற்பட வேண்டும் என்று பலரும் கூறி வருகின்ற இந்நாளிலேயே போரும் புகைச்சலும் நிலவுகின்றனவென்றால், வரலாற் றின் தொடக்கக்கால மனிதன் எவ்வாறு வாழ்ந்திருப்பான் என்பதனைக் கூறவும் வேண்டுமோ?

இவ்வாறு இலக்கியம் கண்ட போர்க்களங்களில் பழமையான போர்க்களம், இராம இராவண யுத்தம் நிகழ்ந்த இலங்கைப் போர்க்களமாகும். இப்போர் நிகழ்ந்ததற்குரிய அடிப்படைக் காரணத்தைப் பிறன்மனை விழைவோர் கிளையொடும் கெடுப’ என்ற பாவிகப் பண்பு கொண்டு அறியலாம். மேலும், வள்ளுவர் பெருமான்,

‘பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ? ஆன்ற ஒழுக்கு’

-திருக்குறள் : 148

என்று பிறர் மனையை மனத்தாலும் எண்ணிப் பாராத அரும்பெரும்பண்பினைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். ஆற்றல் சான்றவனாயிருப்பினும், இராவணன் பிறன் மனை நயத்தலாகிய பேதைமைப்பண் பில் தலைப்பட்ட காரணத்தால், தன் சுற்றமெல்லாம் கெடப் போர்க்களத்தே பட்டொழிந்தான்!

இராம காதை பாரதநாடு அறிந்த பழம்பெருங் கதை யாகும். நாடெங்கும் வாழும் மக்கள் தத்தம் மக்களுக்கு இன்றும் இடும் பெயர்களாகும். வடமொழியின் ஆதி காவியமாகப் போற்றப்படுவது வான்மீகி முனிவர் எழுதிய இராமாயணமாகும். இராமாயணக் கதைக் குறிப்புகள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கக் காணலாம். அக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/107&oldid=1377434" இலிருந்து மீள்விக்கப்பட்டது