பக்கம்:கட்டுரை வளம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 கட்டுரை வளம்

நானுாறு, புறநானுாறு போன்ற பண்டைய நூல்களில் இராமாயணச் கதை நிகழ்ச்சிகள் உவமை வாயிலாக விளக்கப் பெற்றிருத்தல் கண்டு, இராம காதை பழந்தமிழ் மக்கள் நன்கறிந்து போற்றிய கதையே என்ற முடிவிற்கு வரலாம். மேலும் சிலப்பதிக்காரத்திலும் இராம காதைக் குறிப்பு வரக் காணலாம். பிற்கால இலக்கியங்களிலும் உரை களிலும் வரும் குறிப்புகள் மிகப் பலவாகும். இராமா யணத்தைப் பெருங்காப்பியமாகத் தமிழில் தந்த கவிச் சக்கரவர்த்தி கம்பனுக்கு முன்னரும் தமிழ் இராமாயண நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பது புலனாகின்றது. ஆயினும், கம்பன் கட்டிய கலைக்கோயில் கால வெள்ளத் தையும் கடந்து, கற்பவர் உள்ளங்களையெல்லாம் அள்ளிக் கொள்ளை கொண்டு வாழும் கவினுறு காப்பியமாய்த் திகழ்கின்றது.

ஈண்டு இராமாயணப் போர்க்களங்களையே ஒருசிறிது காணலாம். முதற்கண், காகுத்த மரபிலே வந்த இராமன் விளைத்த கன்னிப்போரினைக் காண்போம்.

விசுவாமித்திரர் தவயோகச் சிரேட்டராய்க் காட்டிலே தங்கிக் கடுந்தவம் இயற்றும் துறவறநெறி நின்ற துாய்மை யாளர். ஆனால், அவர் மேற்கொள்ளும் தவமுயற்சிக்கு இடையூறு நேரிட்டது. அவ்விடையூறு ‘தாடகை என்னும் பொல்லா அரக்கியால் வந்துற்றது. கொடிய குணமும் கோர உருவமும் பேராற்றலும் படைத்த அவள், வேத வேள்வியை நிந்தனை செய்துழன்றவள். எனவே அவ் விடையூற்றினின்றும் தவம் தப்பிப் பிழைக்கத் தசரதன் அவையில் அவன் தன் மூத்த கான் முளையாம் இராமனை நயந்து கேட்கின்றார் முனிவர். முதலில் கலங்கிய மன்னன், இறுதியில் மனம் ஒப்பி, இராமனையும் இலக்குவனையும் முனிவர் பின்னே அனுப்புகின்றான். காட்டிலே பாலை வழி குறுக்கிடுகின்றது. நல்ல நிலம் பாழ்பட்டுப் பாலை யானதற்குக் காரணம் தாடகையே என முனிவர் வழிக் கேட்ட இராமன், “அவள் எங்கு உறைகின்றாள்?’ எனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/108&oldid=1377444" இலிருந்து மீள்விக்கப்பட்டது