பக்கம்:கட்டுரை வளம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144 கட்டுரை வளம்

நிகழ்ச்சியிலே முகிழ்த்தது’ குயிற்பாட்டு. இப்பாட்டு வள மான கற்பனையும் நலமான கருத்துகளும் கொண்டு

துலங்குகின்றது.

பாரதியார், உள்ளம் அள்ளும் நீர்மையான கவிதைகள்: பலவற்றை இயற்றித் தமிழுலகிற்குத் தந்துள்ளார்; தேசியக் கவிஞராய் இருந்து நாட்டின் விடுதலைக்கும், முன்னேற் றத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் உரியவான கவிதை களைத் தந்துள்ளார்; தெய்வப்பாடல்களை இயற்றி, யாது மாய், எங்குமாய், எல்லாமாய் நிற்கும் அருட்சத்தியினைப் பத்தியோடு பரவிப் பாடியுள்ளார். சமுதாயச் சீர்திருத்தக் கவிஞராய் விளங்கிப் பெண்ணுரிமைப் பாடல்களைப் பாடிப் புதியதொரு சமுதாயத்தினைச் சமைத்துள்ளார்; ‘முப்பெரும் பாடல்கள்’ என்ற கவிதைகளால் அவர்தம் திருப்பெயர் கவிதை உலகில் வாழ வகை செய்து கொண் டார்; அனைத்திற்கும் மேலாகத் தமிழ்நாட்டுப் பற்றும், தாய்மொழிப் பற்றும், நிறைந்த கவிஞராய்ப் பாரதியார் விளங்கி, நமக்கெல்லாம் நல்வழி காட்டுகின்றார். பாரதி யாரின் பாடல்களைப் பாங்குறப் படிப்போர், அவரைப் ‘பாட்டுக்கொரு புலவன் பாரதி’ என்றும், புதுநெறி காட் டிய புலவன் பாரதி’ என்றும் நெஞ்சம் குளிரப் பாராட்டி ‘மகிழ்வர் என்பது திண்ணம். --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/146&oldid=1382223" இலிருந்து மீள்விக்கப்பட்டது