பக்கம்:கட்டுரை வளம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-சங்க கால மகளிர் 27

  • மணிமே கலைதன் மதிமுகங் தன்னுள் அணிதிகழ் நீலத் தாய்மல ரோட்டிய கடைமணி யுகுநீர் கண்டன னாயிற் படையிட்டு கடுங்குங் காமன்’

-மணிமேகலை, மலர் வனம்புக்க காதை: 20.23

பெண்ணொருத்தியின் அழகினை மதுரை எழுத் தாள ன் சேந்தம் பூதன் என்ற புலவர்.

பூ வொடு புரையுங் கண்ணும் வேயென விறல் வனப் பெய்திய தோளும் பிறையென மதிமயக் குறூஉ நுதலும்

-குறுந்தொகை. 226: 1-3

என்று வருணித்துள்ளார். அடுத்து, மகளிர் மென்மையான உடலமைப்பினைப் பெற்றவர். புறவுலகின் பொய்ம்மை யும் சூதும் அறியாதவர்: உலகின் இடையூறு நிலைகளை யும் விலங்கு முதலியவற்றால் நேர்ந்திடும் இடுக்கண்களை யும் உணராதவர்.ஆனால் உள்ளத் திண்மையால் தம்மைத் தாமே பாதுகாத்துக்கொண்டு இல்லறத்தினை நல்லறமாக ஒம்பும் ஆற்றல் சான்றவர்கள் அவர்களே யாவார்கள். இவ்வாறு மகளிர்பாற் காணத்தகும் மென்னிர்மையினைச் “சாயல்’ என்ற சொல்லால் நந்தமிழர் வழங்கினர். சாய லாகிய மென்மைத் தன்மையினை இயல்பாகப் பெற்றி ருத்தலின் பெண்டிர் பண்டு மெல்லியலார்’ எனப் பொருட் செறிவோடு வழங்கப் பெற்றனர். இத்தகு மென்மை, வன்மையினைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் சான்றது.

“நீரோ ரன்ன சாயல் தீயோ ரன்னவென் னுரனவித் தன்றே”

(95: 4, 5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/29&oldid=1371306" இலிருந்து மீள்விக்கப்பட்டது