பக்கம்:கட்டுரை வளம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

l

28 கட்டுரை வளம்

என்ற குறுந்தொகைப் பாடலின் அடிகள் இக்கருத்து நுட்பத்தினைப் புலப்படுத்தா நிற்கும்.

பெண்ணின் வாழ்வினை இரு பிரிவாகப் பகுத்துணர லாம், திருமணத்திற்கு முன்னர்த் தன் பெற்றோர் வீட்டில் வாழும் வாழ்வு; திருமணம் முடித்துத் தன் காதற்கணவன் வீட்டில் வாழும் கற்பு வாழ்வு என இருவகைப்படுத்திக் காணலாம்.

மகளிர் அக்காலத்தே கல்வி கேள்வியில் வல்லவரா யிருந்தனர். ஆடவர் பயிலுவதற்குரிய கல்வி வேறு போர் துாது, காவல், பொருளிட்டல் முதலிய புறத்துறைகள் ஆண்மகனுக்குரிய துறைகளாகும், எனவே. இத்துறைக் கல்வியே ஆடவர்க்கு வேண்டப்படுவதாயிற்று. மகளிர் தம் குடும்பப் பாங்கிற்கேற்பவும் பண்பிற்கேற்பவுமான கல்வி பயின்றனர். அவர் கற்ற கல்வி அவர்தம் உடலுறுப்பு களுக்கு இயைந்த கல்வியாகவும், பிற்காலத்தில் அவர் மனை வாழ்வினை மாண்புற நடத்துவதற்குஏற்பத் துணை செய்வதாகவும் இருந்தது. மகளிரைப் பொறுத்தவரை அவர்தம் குடும்பமே நல்ல பல்கலைக் கழகமாகவும், அவர் தம் தாயரே சியந்த பேராசிரியராகவும் விளக்கமுற்றனர். எனவே, அக்கால மகளிர் இயல், இசை நாடகம் என்னும் முத்தமிழ்த்துறைகளையும் கற்றுத் துறைபோய வித்தகரா யிருந்தனர். இளமையிலேயே நிறைகல்வி யுற்றவரை ‘முதுக்குறைவி என வழங்கினர். முதுக்குறைந்தனளே விழவுமுதலாட்டி’ என்ற தொடர் சங்க இலக்கியங்களில் யாண்டும் வரக் காணலாம். கண்ணகியும் சிலப்பதிகாரத் தில் சிறுமுதுக்குறைவி எனக் கோவலனால் பாராட்டப் படுகின்றாள்;

‘சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்!”

-சிலப். கொலைக்களக் காதை: 68

எனவே, பெண்கல்வி சிறந்த தமிழ் நாடாகச் சங்க காலத் தமிழகம் துலங்கியது. சான்றாகப் பெண்பாற்புலவர் சிலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/30&oldid=1371316" இலிருந்து மீள்விக்கப்பட்டது