பக்கம்:கட்டுரை வளம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. முல்லைப்பாட்டின் பெயர்ப்பொ ருத்தம்

இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகம் உற்றிருந்த நிலையினைத் தெள்ளத்தெளிய விளக்குவன சங்க இலக்கியங்கள். அவற்றுள் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் பண்டைத் தமிழ்ப் புலவர்கள் கொண்ட உயர்ந்த நோக்கங்களையும் விழுமிய எண்ணங்களையும் விளக்க வல்லனவாய்க் காணப்படுகின்றன. சங்க இலக் கியங்கள் தமிழர்தம் அகப்புற வாழ்வினைத் திறம்படச் சித்திரிக்கின்றன. பண்டு தமிழ் மக்களின் இரு கண்களென அகவாழ்வும் புறவாழ்வும் துலங்கின. தனிப்பட்ட மனித வீட்டு வாழ்வினை அகப்பொருள் இலக்கியங்கள் உணர்த்த நாட்டு வாழ்வினைப் புறப்பொருள் இலக்கியங்கள் உணர்த்துகின்றன. ஆயினும், அகப்பொருள் இலக்கியங் களில் மட்டும் ஒரு நுண்மையான வரையறை, புலவர் களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுவே தலைவன் தலைவியர் பெயரை அகப்பொருள் இலக்கியங்களில் சுட்டிச் சொல்லப் படாமையாகும். இதனைத் தொல் காப்பியனார் ,

“மக்கள் நுதலிய அகனைந் திணையும்

சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்!”

-தொல், அகத்திணை : 54

எனக் குறிக்கிறார். இத்தகைய செம்மை சான்ற வரையறை உணர்ந்து போற்றற்குரியதாகும்.

பத்துப்பாட்டு என்ற பெயரே, அத்தொகை நூலில் உள்ளன. பத்துப்பாட்டுகள் என்பதை நுவலுகின்றது. அவற்றுள் அகப்பொருள் நுதலியன, முல்லைப்பாட்டு’,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/54&oldid=1373299" இலிருந்து மீள்விக்கப்பட்டது