பக்கம்:கட்டுரை வளம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 கட்டுரை வளம்

கட்டுக்காவல் அமைந்த ஊர்க்குப் புறத்தேயுள்ள மாயோன் கோயிலுக்குச் சென்று, தாங்கள் நாழியிலே இட்டுக் கொணர்ந்த நெல்லையும், முல்லை நிலத்தில் மலர்ந்த முல்லைப்பூவினையும், அப்பொழுதலர்ந்த அலரிப்பூ வினையும் தூவி வழிபட்டு நிற்கின்றனர்.

‘அருங்கடி மூதுார் மருங்கிற் போகி

யாழிசை இன வண் டார்ப்ப நெல்லொடு காழி கொண்ட நறுவி முல்லை அரும்பவிழ் அலரி தூ உய்க் கைதொழுது பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப.’

--முல்லைப்பாட்டு 7-11

அதுபொழுது ஒரு நற்சொல் கேட்கின்றனர். முல்லை நிலத் தில் வாழ்பவளான இடைக்குலப் பெண் ஒருத்தி, பாலுண்ணாமை காரணமாகக் கலங்கித் துன்புறுகின்ற இளைய பசுங்கன்றை நோக்கி, ‘உங்கள் தாயர், இடையர் கள் பின்னேயிருந்து செலுத்த இப்பொழுதே வந்து விடுவர்,’ என்கிறாள்;

‘சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள் கடுங்குசுவல் அசைத்த கையள்; கைய கொடுங்கோற் கோவலர் பின்னின்று உய்த்தர இன்னே வருகுவர் தாயர்’ என்போள் கன்னர் கன்மொழி கேட்டணம்...”*

-முல்லைப் பாட்டு 12-17

இவ்வாறு தலைவனும் தான் மேற்கொண்ட வினை முடிந்து, தெவ்வரையடக்கி, அவரைத் திறை செலுத்தப் பணித்து, விரைந்து வருவன் எனத் தலைவியைப் பலவாறு ஏதுக்கள் கூறி வற்புறுத்தவும், அவள் பூப்போன்ற மையுண்ட கண்களிலிருந்து முத்துப்போலும் கண்ணிர்த் துளிகள் துளிர்த்து நிற்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/60&oldid=1373319" இலிருந்து மீள்விக்கப்பட்டது